முகப்பு
உலகம்

நேபாளத்தில் நிலநடுக்கம்..!

நேபாளத்தில் ஞாயிற்றுக்கிழமை(டிச. 14) ஏற்பட்ட நிலஅதிர்வு பற்றி...

Updated On : 14 டிசம்பர், 2025 at 7:58 PM
நேபாளம் - கோப்பிலிருந்து படம் | ஏஎன்ஐ
பகிர்:
Updated On : 14 டிசம்பர், 2025 at 7:49 PM

நேபாளத்தில் ஞாயிற்றுக்கிழமை(டிச. 14) நிலநடுக்கம் ஏற்பட்டது. மத்திய நேபாளத்தின் கந்தகி மாகாணத்தின் மானாங்க் மாவட்டத்தில் இன்று பகல் 12.54 மணியளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது, ரிக்டர் அளவில் 4.7 ஆகப் பதிவானதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 14 டிசம்பர், 2025 at 7:55 PM

மானாங்க் மாவட்டத்தையொட்டியுள்ள கஸ்கி, லம்ஜங் மற்றும் முஸ்தங்க் மாவட்டப் பகுதிகளிலும் நிலஅதிர்வு உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேத விவரங்களைப் பற்றிய விரிவான தகவல் இன்னும் வெளியாகவில்லை.

summary

A mild earthquake shook Manang district of Gandaki province in central Nepal on Sunday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.