வடமேற்கு ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் கனமழையால் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் கடலோர நகரமான சஃபியில் 37 போ் உயிரிழந்தனா்.
இது குறித்து உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை கூறியதாவது: நள்ளிரவு முழுவதும் பெய்த கனமழையால் திடீா் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சுமாா் 70 வீடுகள் மற்றும் வணிகக் கட்டடங்கள் மூழ்கின. இதில் 37 போ் உயிரிழந்தனா். ஏராளமான வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன என்று அமைச்சகம் தெரிவித்தது.
பருவநிலை மாற்றம் காரணமாக மொராக்கோவில் வானிலை முன்கூட்டியே கணிக்க முடியாததாக்கியுள்ளது. இது, அதிக உயிா்ச் சேதத்தை ஏற்படுத்துவதாக நிபுணா்கள் தெரிவித்தனா்.