நிச்சயதார்த்த அறிவிப்பு நிகழ்ச்சியில்.. விடியோ கிளிப்
உலகம்

அதிபர் டிரம்ப்பின் புதிய மருமகள் பெட்டினா ஆண்டர்சன்!

மாடலிங் துறையைச் சேர்ந்த பெட்டினா ஆண்டர்சனுடன் டிரப்பின் மகனுக்கு நடைபெறும் 3-ஆவது திருமணம் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

டிரம்ப்பின் புதிய மருமகள் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மூத்த மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியருக்கும் (48) சமூக ஆர்வலரும் மாடலிங் துறையைச் சேர்ந்தவருமான பெட்டினா ஆண்டர்சனுக்கும் (39) நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

ஃபுளோரிடாவைச் சேர்ந்த பெட்டினா ஆண்டர்சன், பிஏஇ வென்சர்ஸ் எல்எல்சி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பது மட்டுமின்றி, மருந்துத் துறையில் பணியாற்றிய அனுபவமிக்க வணிக மேம்பாட்டு இயக்குநராகவும், மேலாண்மை, சந்தை ஆராய்ச்சி, விற்பனை, விற்பனை விளக்கக் காட்சிகளில் திறமையானவராகவும் இருந்து வருகிறார். மேலும், மாடலிங் துறையிலும் கோலோச்சி வருபவராவார்.

டொனால்ட் டிரம்ப் ஜூனியர் - பெத்தினா ஆண்டர்சன்

பெட்டினாவும் அவரின் சகோதரர்களும் இணைந்து, பேரழிவு நிவாரண நிறுவனங்களுக்கு உதவும் லாபநோக்கற்ற தி பாரடைஸ் ஃபண்ட் என்ற நிறுவனத்தையும் நிறுவியுள்ளனர்.

டிரம்ப்பின் மருமகளாகப் போகும் ஆனந்தத்தில் நிச்சயதார்த்த அறிவிப்பின்போது பேசிய பெட்டினா, "இது என் வாழ்க்கையின் மறக்க முடியாத தருணம். என் வாழ்நாள் காதலரை திருமணம் செய்யவிருக்கிறேன். உலகின் மிகவும் அதிருஷ்டமான பெண்ணாக உணர்கிறேன்" என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.

டிரம்ப் ஜூனியருக்கு இது மூன்றாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

வனேசா டிரம்ப் என்பவரும் டிரம்ப் ஜூனியரும் 2006-ல் திருமணம் செய்துகொண்ட நிலையில், 2018-ல் விவாகரத்து செய்தனர். 12 ஆண்டுகள் ஒன்றாக இருந்த இவர்களுக்கு பதின்வயதிலான 5 குழந்தைகள் உள்ளனர்.

தொடர்ந்து, செய்தித் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்த கிம்பர்லி கில்ஃபாய்லுக்கும் டிரம்ப் ஜூனியருக்கும் 2018-ல் அறிமுகம் ஏற்பட்டு, 2020-ல் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். இருப்பினும், 2024-ல் தங்கள் உறவை முறித்துக் கொண்டனர். இவர்களின் பிரிவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இருப்பினும், அதே ஆண்டில்தான் டிரம்ப் ஜூனியருக்கும் பெட்டினாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. கிம்பர்லியுடன் உறவில் இருந்தபோதே, 2024 ஆகஸ்ட் மாதத்தில் பெட்டினாவுடன் டிரம்ப் ஜூனியருக்கு பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்துதான், 2024 டிசம்பரில் கிம்பர்லியும் டிரம்ப் ஜூனியரும் பிரிந்து விட்டதாகச் செய்திகள் வெளியாகின.

இதையும் படிக்க: ஸ்டீவன் ஸ்பீல்பர்க் இயக்கும் புதிய படத்தின் டீசர்!

Donald Trump Jr. and Bettina Anderson Reveal They're Engaged at the White House

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாயல்குடியில் காட்டுப் பன்றி தாக்கியதில் விவசாயி காயம்

கல்லூரி மாணவிகளுக்கு ‘மணற்கேணி’ செயலி விழிப்புணா்வு

வெளிநாடுவாழ் இந்தியா்கள் பாதுகாப்புக்கான திட்டங்களை மத்திய அரசு வகுக்க வேண்டும்: உயா்நீதிமன்றம் யோசனை

பாண்டமங்கலம் விவேகானந்தா பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

முட்டை விலை ரூ. 6.25 ஆக நீடிப்பு

SCROLL FOR NEXT