கம்போடியாவின் மக்கள் குடியிருப்புகள் அதிகமுள்ள பகுதிகளைக் குறிவைத்து, தாய்லாந்து ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தின் இந்தத் தாக்குதல்களால், இதுவரை கம்போடியாவில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.
கம்போடியா மற்றும் தாய்லாந்து இடையே நீண்டகாலமாக நிலவி வந்த எல்லைப் பிரச்னைகளால், கடந்த 17 நாள்களாக மோதல்கள் நடைபெற்று வருகின்றன.
ஏற்கெனவே, இருநாடுகளுக்கும் இடையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் தாக்குதலைத் தொடங்கியது குறித்து தாய்லாந்து மற்றும் கம்போடியா அரசுகள் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில், கம்போடியாவில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளைக் குறிவைத்து தாய்லாந்து ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும்; இதனால், டிச.22 மாலை 6 மணி நிலவரப்படி ஒரு குழந்தை உள்பட 21 பேர் கொல்லப்பட்டதாகவும், கம்போடியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, கம்போடியாவில், தாய்லாந்து தாக்குதல் நடத்தும் பகுதிகளில் இருந்து இதுவரை 5.45 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, தாய்லாந்து - கம்போடியா விவகாரம் குறித்து தென்கிழக்கு ஆசிய நாடுகள் (ஆசியான்) அமைப்பைச் சேர்ந்த நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், திங்களன்று மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: அமெரிக்க கடல்பகுதியில் மெக்சிகோ கடற்படை விமானம் விபத்து! 5 பேர் பலி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.