முன்னாள் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்  படம் - ஏபி
உலகம்

முன்னாள் மலேசிய பிரதமருக்கு 15 ஆண்டு சிறை! ரூ.29,000 கோடி அபராதம்!

மலேசியாவின் முன்னாள் பிரதமருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது...

இணையதளச் செய்திப் பிரிவு

ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு, 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.29,000 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மலேசியா நாட்டில், கடந்த 2009 முதல் 2018 ஆம் ஆண்டு வரை பிரதமராகப் பதவி வகித்தவர் நஜீப் ரசாக். இவரது ஆட்சியில், அரசு நிதிகளின் மூலம் பல முன்னணி துறைகளில் முதலீடு செய்வதற்காக ஒன் மலேசியா டெவலப்மெண்ட் பெர்ஹார் (1எம்டிபி) எனும் அரசு நிறுவனம் தொடங்கப்பட்டது.

இந்த நிறுவத்தின், முழுமையான அதிகாரத்தையும் அப்போதைய பிரதமரும் நிதியமைச்சருமான நஜீப் ரசாக் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அந்த நிறுவனத்தின் நிதியில் இருந்து 700 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான பணத்தை தனது சொந்த வங்கிக் கணக்கிற்கு அனுப்பியதாக, முன்னாள் பிரதமர் ரசாக்கின் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இந்த நிலையில், உலகின் மிகப் பெரிய ஊழல்களில் ஒன்றான இந்த வழக்கில், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது, ஊழல் மற்றும் பணமோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் 72 வயதான முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கை குற்றவாளி என அந்நாட்டு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனைத் தொடர்ந்து, நஜீப் ரசாக்கிற்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 13.5 பில்லியன் மலேசிய ரிங்கிட் (ரூ.29,000 கோடி) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 2.08 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும் மலேசிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கெனவே, 1 எம்பிடி தொடர்பான மற்றொரு பணமோசடி வழக்கில் கடந்த 2020 ஆம் ஆண்டு ரசாக்கிற்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அந்தத் தண்டனை வரும் 2028 ஆம் ஆண்டு நிறைவடைந்தவுடன், தற்போது விதிக்கப்பட்டுள்ள தண்டனைகளை அவர் அனுபவிக்க நேரிடும் எனக் கூறப்படுகிறது.

முன்னதாக, அரசு நிதியில் இருந்து முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மற்றும் அவரது கூட்டாளிகள் 4.5 பில்லியன் டாலர் பணத்தைத் தங்களது சொந்த செலவுகளுக்குப் பயன்படுத்தியதாகவும், அந்தப் பணத்தின் மூலம் சொகுசுக் கப்பல்கள் வாங்கியதுடன், சில ஹாலிவுட் திரைப்படங்களில் முதலீடு செய்ததாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும், முன்னாள் பிரதமர் ரசாக் மறுத்துள்ளார். தனது வங்கிக் கணக்கில் இருந்த பணம் சௌதி அரேபியாவில் இருந்து அவரது அரசியல் பணிகளுக்காக வழங்கப்பட்ட நிதியுதவி எனக் கூறியுள்ளார்.

மேலும், முன்னாள் பிரதமர் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சூர் என்பவருக்கும், கடந்த 2022 ஆம் ஆண்டு மற்றோர் ஊழல் வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Former Malaysian PM Najib Razak, who was accused in a corruption case, has been sentenced to 15 years in prison and fined 29,000 crore rupees.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மடிக்கணினி பேட்டரி பழுதுபாா்ப்பு கடையில் தீ விபத்து- இளைஞா் உயிரிழப்பு

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஆா்ப்பாட்டம்

தகராறில் கணவரைத் தாக்கிய பெண் கைது

கஞ்சா, போதை மாத்திரை விற்பனை: 3 இளைஞா்கள் கைது

பாஜகவின் மதவெறி ஆட்டத்திற்கு இங்கு இடமில்லை! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT