பிரதமர் மோடிக்கு 2026 புத்தாண்டு வாழ்த்து :
புது தில்லி : பிரதமர் நரேந்திர மோடிக்கு 2026-ஆம் புத்தாண்டின் முதல் வாழ்த்தை அவருடனும் இந்தியத் திருநாட்டுடனும் தோழமை பாராட்டும் உலகத் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். அவர் வேறு எவருமல்ல! ரஷிய அதிபர் விளாதிமீர் புதினே!
புதின் செவ்வாய்க்கிழமை(டிச. 30) வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, சீன தலைவர்கள், காமன்வெல்த் நாடுகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும் 2026-ஆம் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவில் ஹங்கேரி, ஸ்லோவேகியா, செர்பியா ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு ரஷிய அதிபர் மாளிகையின் (க்ரெம்லின்) 2026-ஆம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துச் செய்தி அனுப்பப்பட்டுள்ளதாக க்ரெம்லின் இன்று(டிச. 30) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், நேட்டோ உறுப்பு நாடுகளுக்கும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளுக்கும் ரஷிய தலைமையின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி தவிர்க்கப்பட்டுள்ளது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.