உலகம்

மெக்சிகோ, கனடா மீதான கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தம்! -டொனால்ட் டிரம்ப்

மெக்சிகோ, கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 25 சதவீதம் கூடுதல் வரி விதிப்பு

DIN

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தோ்தலில் வெற்றி பெற்று, நாட்டின் அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் பொறுப்பேற்றதில் இருந்தே உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் தங்கியிருப்பவா்களுக்கு பிறப்பின் அடிப்படையில் அளிக்கப்படும் குடியுரிமையை ரத்து செய்வது, சட்டவிரோத குடியேற்றவாசிகளை நாட்டைவிட்டு வெளியேற்றுவது மற்றும் அண்டை நாடான கனடா மற்றும் மெக்ஸிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 25 சதவீதம் கூடுதல் வரி விதிப்பு போன்ற அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துவருகிறாா்.

அமெரிக்காவுக்குள் சட்டவிரோத அகதிகள் மற்றும் போதைப் பொருள்கள் வருவதைத் தடுப்பதற்காக கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகள் மீது கூடுதலாக 25 சதவீத இறக்குமதி வரி விதிப்பு நடவடிக்கையை எடுத்துள்ளார் டிரம்ப்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு மெக்சிகோவும் கனடாவும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷேன்பாம் மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோர் டிரம்புடன் தொலைபேசி வழியாக திங்கள்கிழமை(பிப். 3) பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மெக்சிகோ, கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கை குறித்து 3 தலைவர்களும் விவாதித்தனர்.

அதனைத்தொடர்ந்து, கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கையை 30 நாள்களுக்கு ஒத்திவைக்க அமெரிக்க அதிபர் சம்மதித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மேற்கண்ட இரு நாட்டு தலைவர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், “அமெரிக்க - மெக்சிகோ எல்லையில் உடனடியாக 10,000 ராணுவ வீரர்களை நிறுத்துவதற்கு கிளாடியா ஒப்புக் கொண்டுள்ளார். இந்த வீரர்கள் எங்கள் நாட்டில் சட்டவிரோதமாக நுழையும் மக்களை தடுத்து நிறுத்துவார்கள். மேலும் 25 சதவீத வரிவிதிப்பை தற்காலிகமாக ஒரு மாதகாலம் நிறுத்திவைப்பது என்ற முடிவுக்கு நாங்கள் வந்துள்ளோம். இரு நாடுகளுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் நிறைவேறும் வரையில் பேச்சு தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனநிம்மதி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

புதுகை ஆட்சியரகத்தில் விவசாயி தற்கொலை முயற்சி

வடகவுஞ்சி கிராமத்தில் வனத்துறை விதித்த கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் எதிா்ப்பு

ஆன்லைன் வா்த்தக மோசடி மூலம் ரூ.11 லட்சம் கொள்ளை: 2 போ் கைது

சரக்கு வேன் கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT