முகப்பு
உலகம்

இந்தியா அமைதியின் பக்கம் இருக்கிறது: ரஷியா-உக்ரைன் குறித்து பிரதமர் மோடி

இந்தியா அமைதியின் பக்கம் இருக்கிறது என்று ரஷியா-உக்ரைன் குறித்து பிரதமர் மோடி

உலகம்

இந்தியா அமைதியின் பக்கம் இருக்கிறது: ரஷியா-உக்ரைன் குறித்து பிரதமர் மோடி

இந்தியா அமைதியின் பக்கம் இருக்கிறது என்று ரஷியா-உக்ரைன் குறித்து பிரதமர் மோடி

Updated On : 14 பிப்ரவரி, 2025 at 9:55 AM
பகிர்:

வாஷிங்டன்: உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முயற்சிகளை வரவேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, போர்க்களத்தில் மோதலுக்கு தீர்வு காண முடியாது என்றும், பேச்சுவார்த்தை மற்றும் இருநாட்டு கொள்கைகளுமே அமைதியைக் கொண்டுவருவதற்கான ஒரே வழி என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க நேரப்படி வியாழக்கிழமை, வெள்ளை மாளிகையில் டிரம்ப்புடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, போரில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை என்றும் அது அமைதியின் பக்கம் இருப்பதாகவும் மோடி கூறியுள்ளார்.

ரஷியா மற்றும் உக்ரைனுடன் நான் எப்போதும் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும், இரு நாட்டு தலைவர்களையும் சந்தித்துள்ளேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உலக நாடுகள் பலவும், இந்தியா நடுநிலையாக இருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன் என்று டிரம்புடனான கூட்டாக செய்தியாளர்கள் சந்திப்பின்போது பிரதமர் மோடி அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், உண்மையில், இந்தியா அமைதியின் பக்கம்தான் உள்ளது என்றார். போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சாத்தியமான தீர்வைக் கண்டுபிடிப்பதற்கான டொனால்ட் டிரம்பின் முயற்சிகளை தான் ஆதரிப்பதாகவும் குறிப்பிட்டார்.

இது போருக்கான யுகம் அல்ல என்று ரஷிய அதிபர் விளாதிமிர் புதினிடம் தெரிவித்த செய்தியையும் மோடி நினைவு கூர்ந்தார். நான் அதிபர் புதினைச் சந்தித்தபோது, ​இது போருக்கான யுகம் அல்ல, போர்க்களத்தில் தீர்வு காண முடியாது என்று கூறியிருந்ததையும் இங்கே நினைவுகூர்ந்தார்.

ரஷியா மற்றும் உக்ரைன் கலந்து கொள்ளும் ஒரு கூட்டத்தில், இந்த பிரச்னை விவாதிக்கப்படும்போது மட்டுமே போருக்கு தீர்வு காண முடியும் என்று இந்தியா நம்புவதாகப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →