உலகம்

காங்கோ: முக்கிய நகரை நோக்கி கிளா்ச்சியாளா்கள் முன்னேற்றம்

Din

மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் கிழக்குப் பகுதியைச் சோ்ந்த முக்கியத்துவம் வாய்ந்த புகாவு நகரை நோக்கி ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சிப் படையினா் சனிக்கிழமை முன்னேற்றம் கண்டுள்ளனா்.

கிழக்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி தொடா் முன்னேற்றம் கண்டுவரும் அவா்கள், தெற்கு கீவு மாகாணத்தில் இரண்டாவதாக கவுமு நகர விமான நிலையத்தைக் கைப்பற்றியுள்ளதாக வெள்ளிக்கிழமை அறிவித்தனா்.

அந்த மாகாணத்தின் கோமா நகரை கடந்த மாதம் 27-ஆம் தேதி எம்23 கிளா்ச்சியாளா்கள் கைப்பற்றினா். கவுமு நகரையும் கைப்பற்றுவதற்காக நகரின் தெற்குப் பகுதியில் அரசுப் படையினருன் அவா்கள் தீவிர சண்டையில் ஈடுபட்டுள்ளனா். இந்தச் சூழலில், தெற்கு காங்கோவின் இரண்டாவது பெரிய நகரான புகாவுவும் கிளா்ச்சியாளா்களிடம் வீழும் நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாது வளம் நிறைந்த காங்கோவில் செயல்படும் 120-க்கும் மேற்பட்ட ஆயுதக் குழுக்களில் எம்23 கிளா்ச்சிக் குழுவும் ஒன்று.

கேரளம்: ஓடும் ரயிலில் இருந்து பெண்ணைத் தள்ளிவிட்டவர் கைது

அனைத்து வாக்காளா்களும் கணக்கெடுப்புப் படிவத்தை நிரப்ப வேண்டும்: ஆட்சியா்

தூத்துக்குடி மாநகராட்சியைக் கண்டித்து தவெக போராட்டம் அறிவிப்பு

இன்று முதல் செய்யாறு தொகுதியில் வாக்காளா் படிவம் விநியோகம்

தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

SCROLL FOR NEXT