இஸ்ரேல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பாலஸ்தீன கைதி காஸா திரும்பியதை வரவேற்ற குடும்பத்தார் AP
உலகம்

பாலஸ்தீன அகதிகளுக்கான மீட்புப் பணிகளை ஐ.நா. மேற்கொள்ள இஸ்ரேல் பிரதமர் அறிவுறுத்தல்!

மத்திய கிழக்கில் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ. நா. மீட்புப் பணிகள் முகமை(யு.என்.ஆர்.டபில்யூ.ஏ) சட்டத்தை அமல்படுத்த அறிவுறுத்தல்

DIN

டெல் அவிவ் : பாலஸ்தீன அகதிகளுக்கான மீட்புப் பணிகளை ஐ. நா. மேற்கொள்ளலாம் என்று இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ. நா. மீட்புப் பணிகள் முகமை(யு.என்.ஆர்.டபில்யூ.ஏ) சட்டத்தை உடனடியாக அமல்படுத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செவ்வாய்க்கிழமை(பிப். 18) அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தரப்பில் வெளியிட்டுள்ள பதிவில், இஸ்ரேல் அமைச்சரவையில் ஒருமித்த கருத்துடன் எடுக்கப்பட்டுள்ள மேற்கண்ட முடிவை அமல்படுத்த எவ்வித தடையும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

ஐ. நா. வின் இந்த முகமை கடந்த பல ஆண்டுகளாக பாலஸ்தீன அகதிகளுக்கு அதிலும் குறிப்பாக, இஸ்ரேல் ஆக்கிரமிப்பிலுள்ள மேற்கு கரை, காஸா உள்ளிட்ட பாலஸ்தீன மக்கள் வசிக்கும் பகுதிகளில் அத்தியாவசிய தேவைகளையும் மனிதாபிமான உதவிகளையும் வழங்கி சேவையாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இஸ்ரேல் நாடாளுமன்றமான ‘நெசெட்’ கடந்த ஆண்டு அக்டோபரில் இரு சட்டங்களை பிறப்பித்தது. அதன்படி, இஸ்ரேல் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் மத்திய கிழக்கில் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ. நா. மீட்புப் பணிகள் முகமை செயல்படத் தடையும் பிறப்பிக்கப்பட்டது.

இதற்கு ஐ. நா. தரப்பு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், பாலஸ்தீன அகதிகளுக்கான மீட்புப் பணிகளை ஐ. நா. மேற்கொள்ளலாம் என்று இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் ராணுவம் மற்றும் காஸாவின் ஹமாஸ் படையினா் இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா, கத்தாா், எகிப்து ஆகிய நாடுகளின் முயற்சியில் பல மாதங்களாக நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பின் அங்கு கடந்த ஜனவரி 19-ஆம் தேதிமுதல் போா் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இந்த முடிவை இஸ்ரேல் இன்ரு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளி மாணவா் தற்கொலை

வீட்டில் தீ விபத்து: மாற்றுத்திறனாளி உயிரிழப்பு

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி: ஜி.கே வாசன்

ஒளிவீசும் நிலம்... லைலா!

ஒசூரில் 780 விநாயகா் சிலைகள் கரைப்பு

SCROLL FOR NEXT