கோப்புப் படம் 
உலகம்

ஆப்கானிஸ்தான்: கடும் பனிப்பொழிவால் 36 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவால் 36 பலியானதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

DIN

ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவால் 36 பலியானதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாள்களாக நாடு முழுவதும் கடும் பனிப்பொழிவுடன் மழையும் பெய்வதால், அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் வறட்சி நிலையை பனிப்பொழிவு குறைத்தாலும், நாட்டின் பொருளாதார இழப்புக்கும் காரணமாக அமைந்து விட்டது. பனிப்பொழிவு காரணமாக நாட்டின் சில சாலைகளும் மூடப்பட்டு விட்டன.

இந்த நிலையில், கடும் பனிப்பொழிவு மற்றும் மழையின் காரணமாக இதுவரையில் 36 உயிரிழந்ததாகவும், குறைந்தது 46 பேர் காயமடைந்திருப்பதாகவும் அந்நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா ஜான் சைக் கூறியுள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புக் குழுக்கள் அனுப்பப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்னல் தாக்கி சிகிச்சையிலிருந்த சிறுவன் பலி!

ஓசூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

சொல்லப் போனால்... மருந்தெனப்படுவது விஷமானால்...

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT