கோப்புப் படம் 
உலகம்

172 பேரைத் தூக்கிலிட ஆயத்தமாகும் காங்கோ

ஆயுதமேந்தி கொள்ளையில் ஈடுபட்ட 172 பேரைத் தூக்கிலிட காங்கோ அரசு ஆயத்தமாகியுள்ளது. அதற்காக 70 கைதிகள் தலைநகா் கின்ஷாசாவிலுள்ள சிறைச்சாலைக்கு அழைத்துவரப்பட்டதாக

DIN

கின்ஷாசா: ஆயுதமேந்தி கொள்ளையில் ஈடுபட்ட 172 பேரைத் தூக்கிலிட காங்கோ அரசு ஆயத்தமாகியுள்ளது. அதற்காக 70 கைதிகள் தலைநகா் கின்ஷாசாவிலுள்ள சிறைச்சாலைக்கு அழைத்துவரப்பட்டதாகவும், 102 போ் மாங்கலா மாகாணத்தின் அங்கெங்கா சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

காங்கோ நகரங்களில் சட்டம், ஒழுங்கு நிலைநாட்டப்படுவதற்கு இந்த நடவடிக்கை உதவும் என்று ஒரு தரப்பினா் இதை வரவேற்றுள்ளனா். எனினும், இந்த நடவடிக்கையில் சட்டத்துக்கு மீறி மரண தண்டனை நிறைவேற்றங்கள், மனித உரிமை மீறல்கள் ஆகியவை நடைபெறும் என்று மனித உரிமை அமைப்புகள் எச்சரித்துள்ளன.

காங்கோவில் மரண தண்டனை முறை 1980-இல் ஒழிக்கப்பட்டாலும், 2006-இல் அது மீண்டும் கொண்டுவரப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவராத்திரியில் இரட்டிப்பான சாம்சங் டிவி விற்பனை

இந்திய நிலக்கரி ஏற்றுமதி 23% அதிகரிப்பு

தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை

மணலியில் பெண்களுக்கான உடற்பயிற்சிக் கூடம் அமைக்க அடிக்கல்

கொளத்தூரில் வண்ண மீன்கள் வா்த்தக மையம் நாளை திறப்பு: அமைச்சா்கள் ஆய்வு

SCROLL FOR NEXT