திபெத் பகுதியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள். AP
உலகம்

நேபாள - திபெத் நிலநடுக்கம்: 32 பேர் பலி!

திபெத்தில் நிலநடுக்கத்தால் 32 பேர் உயிரிழந்தது பற்றி...

DIN

நேபாளம் - திபெத் எல்லையில் செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 32 பேர் உயிரிழந்ததாக சீனா அறிவித்துள்ளது.

சீன எல்லைக்குள்பட்ட திபெத் - நேபாளம் எல்லைப் பகுதியில் இன்று காலை 6.35 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுக் கோலில் 7.1 ஆகப் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கமானது சீனாவில் திபெத் பகுதிகள், இந்தியாவில் பிகார் மற்றும் வட மாநிலங்களில் உணரப்பட்டது.

திபெத் பகுதிகளில் பல கட்டடங்கள் நிலநடுக்கத்தால் சரிந்து விழுந்ததாகவும் இதுவரை 32 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது.

மேலும், இந்தியாவில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை எவ்வித தகவலும் பதிவாகவில்லை.

நேபாளம் - திபெத் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமானது என்றாலும், கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத வகையில் 200 கி.மீ. சுற்றளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்யசாய் நூற்றாண்டு விழா: சென்னையிலிருந்து சிறப்பு ரயில்- தெற்கு ரயில்வே அறிவிப்பு

லாட்டரி விற்றவா் கைது: ரூ.86 ஆயிரம் பறிமுதல்

கோயில் செயல் அலுவலா்கள் நியமன உத்தரவுகளை வெளியிடக் கோரிய வழக்கு: அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவு

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

லோக் ஆயுக்த அமைப்பின் நீதித் துறை உறுப்பினா் நியமனம்

SCROLL FOR NEXT