சாலையை சீரமைக்கும் பணியில் மீட்புக் குழுவினர். AP
உலகம்

அமெரிக்காவில் பனிப் புயல்: 2 லட்சம் பேர் பாதிப்பு!

அமெரிக்காவில் நிலவும் மோசமான வானிலை பற்றி...

DIN

அமெரிக்காவில் ஏற்பட்ட பனிப் புயலால் 5 பேர் உயிரிழந்துள்ளதாக திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு அமெரிக்க நகரங்களில் கடுமையான பனி மழை பெய்து வருகின்றது. மிசோரி முதல் வர்ஜீனியா வரையிலான நகரங்களில் திங்கள்கிழமை பிற்பகல் முதல் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மின் சேவை கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வானிலை மிகவும் மோசமாக காணப்படுவதால் 2,400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆயிரக்கணக்கான விமான சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மேலும், சாலை வழிப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான மக்களின் பயணத் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள கடுமையான வானிலையை அதிபர் ஜோ பைடன் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட மாகாணங்களுக்கு தேவையான உதவிகள் அனைத்து வழங்க உத்தரவிட்டுள்ளார் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காரைக்காலில் தொடர் மழை: பள்ளிகளுக்கு விடுமுறை!

அயலகத் தமிழா் மாநாட்டில் 4 ஒப்பந்தங்கள்

மணப்பாறையில் மயில்களை வேட்டையாடிய 5 போ் கைது

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் தீ தடுப்பு சோதனை

பெரிய சூரியூா் புதிய மைதானத்தில் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு

SCROLL FOR NEXT