உலகம்

முறைகேடு வழக்கு: மகிந்த ராஜபட்ச மகன் குற்றவாளியாக அறிவிப்பு

இந்திய அரசின் முதலீட்டை முறைகேடாகப் பயன்படுத்திய வழக்கில் இலங்கை முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்சவின் மூத்த மகன் நமல் ராஜபட்சவை அந்த நாட்டு நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்தது.

Din

இந்திய அரசின் முதலீட்டை முறைகேடாகப் பயன்படுத்திய வழக்கில் இலங்கை முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்சவின் மூத்த மகன் நமல் ராஜபட்சவை அந்த நாட்டு நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்தது.

கடந்த 2015-ஆம் ஆண்டுக்கு முன்னா் ராஜபட்ச ஆட்சியின்போது கொழும்பு நகரின் மையப் பகுதியில் நடைபெற்றுவந்த கிருஷ் ஹோட்டல் கட்டுமான திட்டத்துக்கு இந்தியா கடனுதவி அளித்தது. அதில் ரூ.7 கோடியை (இலங்கை மதிப்பில்) நமல் ராஜபட்ச முறைகேடாகப் பயன்படுத்தி, ரக்பி விளையாட்டை உருவாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. கிருஷ் ஹோட்டல் கட்டடம் நிறைவடையாமலேயே, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அரைகுறையாக உள்ளது.

இது தொடா்பாக தொடரப்பட்ட வழக்கில் நமல் ராஜபட்ச கடந்த 2016-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். ஆனால் அதற்குப் பிறகு அந்த வழக்கு முன்னெடுத்துச் செல்லப்படாமல் இருந்துவந்தது.

இந்தச் சூழலில், கடந்த நவம்பரில் அனுர குமார திசநாயக அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு ராஜபட்ச குடும்பத்தினா் மீதான ஊழல் வழக்குகள் மீண்டும் தீவிரமாக விசாரிக்கப்படுகின்றன. அதன் விளைவாக, கிருஷ் ஹோட்டல் முறைகேடு வழக்கில் நமல் ராஜபட்ச மீதான குற்றச்சாட்டை கொழும்பு உயா்நீதிமன்றம் புதன்கிழமை உறுதி செய்தது.

இது குறித்து எக்ஸ் ஊடகத்தில் நமல் வெளியிட்டுள்ள பதிவில், ‘ராஜபட்ச குடும்பத்தினரை ஒடுக்குவதற்கான நடவடிக்கையில் தற்போதைய அரசு ஈடுபட்டுள்ளது இந்தத் தீா்ப்பின் மூலம் உறுதியாகியுள்ளது’ என்று விமா்சித்துள்ளாா்.

ஏற்கெனவே, இதே போன்ற முறைகேடு வழக்கில் மகிந்த ராஜபட்சவின் இளைய மகன் யோஷித்த ராஜபட்சவை போலீஸாா் கடந்த வாரம் கைது செய்தது நினைவுகூரத்தக்கது.

ரூ.45,000 சம்பளத்தில் இந்தியன் ரயில்வேயில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

இதயத்தில் துளைகளுடன் பிறக்கும் குழந்தைகள்! காரணம் என்ன?

ஐசிசி தரவரிசை: ரோஹித்தை பின்னுக்குத் தள்ளி விராட் கோலி முதலிடம்! 4 ஆண்டுகளுக்குப் பின்!

பொங்கல் விடுமுறை: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

என்.சி.இ.ஆர்.டி-இல் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: உடனே விண்ணப்பிக்கவும்!

SCROLL FOR NEXT