போடோமாக் நதியில் தேடுதல் பணியில் வீரர்கள். AP
உலகம்

அமெரிக்க விமான விபத்து: 19 சடலங்கள் மீட்பு!

அமெரிக்க பயணிகள் விமான விபத்து பற்றி...

DIN

அமெரிக்காவில் பயணிகள் விமானமும் ராணுவ ஹெலிகாப்டரும் மோதி விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து 19 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன் ரீகன் தேசிய விமான நிலையம் அருகே பிஎஸ்ஏ ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கிய போது, ராணுவப் பயிற்சி ஹெலிகாப்டர் மோதியதில் புதன்கிழமை இரவு விபத்துக்குள்ளானது.

பயணிகள் விமானத்தில் 60 பயணிகள், 4 ஊழியர்கள் பயணித்தனர். ராணுவ ஹெலிகாப்டரில் 3 வீரர்கள் பயணித்தனர்.

இந்த விபத்தில் பயணிகள் விமானம் போடோமாக் நதிக்குள் விழுந்தது. இதனைத் தொடர்ந்து, அவசரகால மீட்புப் படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

உள்ளூர் நேரப்படி புதன்கிழமை இரவு 9 மணியளவில் விபத்து நடந்த நிலையில், தேடுதல் பணியை வேகப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

இதுவரை 19 சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், ஹெலிகாப்டர்கள் மூலம் தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த விபத்தை தொடர்ந்து வாஷிங்டன் ரீகன் தேசிய விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனுமன் ஜெயந்தி: கோவில்பட்டி கோயில்களில் சிறப்பு பூஜை

நாலாட்டின்புதூா் அருகே சாலை விபத்தில் ஓட்டுநா் உயிரிழப்பு

சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் கொலை வழக்கு முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றம்

மூத்தோா் மாநில தடகளத்தில் பங்கேற்போருக்குப் பாராட்டு

கூட்டுறவு பட்டயப் படிப்பு: பழைய பாடத்திட்டத்துக்கு பிப்ரவரியில் துணைத் தோ்வு

SCROLL FOR NEXT