பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், சமூக ஊடகங்களில் வன்முறையைத் தூண்டும் வகையில் வெறுப்புப் பேச்சு பதிவுகளை வெளியிட்ட சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முஹரம் பண்டிகையை முன்னிட்டு, பஞ்சாப் மாகாணத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் சமூக ஊடகங்களைப் பதிவிடும் நபர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள அம்மாகாண முதல்வர் மரியம் நவாஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இத்துடன், முஹரம் பண்டிகையின்போது, பிரிவிணைவாதத் தாக்குதல்கள் ஏற்படக்கூடும் என அஞ்சப்படுவதால், பஞ்சாப் மாகாணம் முழுவதும் பதாகைகள், போஸ்டர்கள், ஆயுதங்கள் ஆகியவற்றை காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கடந்த 2 நாள்களில் பிரிவிணைவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் முகப்புத்தகம், வாட்ஸ் ஆப், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்ட சுமார் 50 பேரை பஞ்சாப் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், அம்மாகாணத்தில் தற்போது ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி ட்ரோன்களை இயக்கும் நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.