உக்ரைன் எல்லையில் அமைந்துள்ள ரஷியாவின் குர்ஸ்க் மாகாணத்தில் அந்நாட்டு கடற்படையின் துணைத் தலைவர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உக்ரைனுடனான போரில், அந்நாட்டின் எல்லையில் அமைந்துள்ள ரஷியாவின் மேற்கு குர்ஸ்க் மாகாணத்தில், ரஷிய கடற்படையின் துணைத் தலைவர் மேஜர் ஜெனரல் மிகைல் குட்கோவ், ”போர் வேலைகளின்போது” கொல்லப்பட்டதாக, ரஷிய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்த, தெளிவான தகவல்கள் இதுவரை வெளியிடப்படாத நிலையில், முன்னணியிலுள்ள தனது படைகளைச் சந்தித்தபோது ஜெனரல் குட்கோவ் கொல்லப்பட்டார், என குர்ஸ்க் மாகாணத்தின் ஆளுநர் அலெக்ஸாண்டர் கின்ஷ்டெயின் கூறியுள்ளார்.
ரஷிய கூட்டமைப்பின் நாயகன் என்ற மிக உயர்ந்த பட்டங்களைப் பெற்ற குட்கோவ், 115-வது கடற்படைப் பிரிவின் தளபதியாகப் பணியாற்றி வந்தார். இதையடுத்து, கடந்த மார்ச் மாதம் அவர் ரஷிய கடற்படையின் துணைத் தலைவராகப் பதவி உயர்வு பெற்றார்.
கடந்த 2022-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ரஷியா - உக்ரைன் போரில், ரஷிய ராணுவத்தின் 10 தளபதிகள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: சிகாகோ இரவு விடுதியில் சரமாரி துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.