வியட்நாமில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 18 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வியட்நாமில் ஹா லாங் விரிகுடாவில் 50 பேருடன் சனிக்கிழமை பிற்பகல் சென்ற சுற்றுலாப் படகு திடீரென இடியுடன் கூடிய பெய்த மழையினால் கவிழ்ந்தது.
இந்த சம்பவத்தில் 18 பேர் நீரிழ் மூழ்கி பலியாகினர். மேலும் 23 பேரைக் காணவில்லை. அதேசமயம் 12 பேரை மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
பலத்த காற்று காரணமாக படகு தலைகீழாக கவிழ்ந்தது என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிர் பிழைத்தவர்களில் 14 வயது சிறுவனும் அடங்குவான். கவிழ்ந்த படகில் சிக்கியிருந்த சிறுவனை நான்கு மணி நேரத்திற்குப் பிறகு மீட்டுள்ளனர்.
சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலோர் தலைநகர் ஹனோவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அடுத்த வாரம் ஹா லாங் விரிகுடாவின் கடற்கரை உள்பட வியட்நாமின் வடக்குப் பகுதியை புயல் விபா தாக்கலாம் என்று அந்நாட்டு வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.