படம் | உக்ரைன் பிரதமர் யூலியா ஸ்விரிடென்கோ பதிவு
உலகம்

ரஷியாவுக்கு எதிராக துணிச்சலான நடவடிக்கை தேவை: உக்ரைன் புதிய பிரதமர்

உக்ரைன் நகரங்களில் ரஷியா மீண்டும் அத்துமீறல்! பல குடும்பங்கள் பாதிப்பு...

இணையதளச் செய்திப் பிரிவு

கீவ்: ரஷியாவை எதிர்த்து துணிச்சலுடன் போராட வேண்டும் என்று உக்ரைன் புதிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் ரஷியா ட்ரோன் மூலம் தாக்குதல் தொடுத்துள்ளது. உக்ரைனுடன் இன்னும் 50 நாள்களுக்குள் போா் நிறுத்தம் மேற்கொள்ளாவிட்டால் தங்கள் நாட்டின் மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கடந்த சில நாள்களுக்கு முன் எச்சரித்ததற்குப் பிறகும், உக்ரைன் மீது ரஷியா தீவிர வான்வழித் தாக்குதலை புதன்கிழமை அதிகாலை வரை தொடா்ந்தது.

ஒடேசாவில் தாக்குதல்

இது குறித்து அந்நாட்டின் புதிய பிரதமர் யூலியா ஸ்விரிடென்கோ கூறியிருப்பதாவது: ‘ரஷிய படைகள் உக்ரைன் நகரங்களில் மீண்டும் கொடுந்தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளன. ஒடேசாவில் மக்களை குறிவைத்து ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டார். பல பேர் படுகாயமடைந்துள்ளனர். பல குடும்பங்கள் சிதைக்கப்பட்டுள்ளன. இதற்கு துணிச்சலான பதிலடி அளிக்கப்படாவிட்டால் ரஷியாவிலிருந்து மீண்டும் தாக்குதல்கள் நடத்தப்படலாம்’ என்று தெரிவித்துள்ளார்.

Russians again launched a brutal attack on Ukraine's cities: “Without bold response, the strikes will come again” - Yulia Svyrydenko

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெட்டாவுடன் இணைந்த தமிழக அரசு! இனி வாட்ஸ்-ஆப் மூலமே 50 சேவைகள் பெறலாம்!

ஆதிக்கத்தை எந்நாளும் எதிர்த்து நிற்போம்: துணை முதல்வர் உதயநிதி

மூவர் அரைசதம்: ஆஸி.யை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா ஏ மகளிரணி!

பாஜகவில் இணைந்தார் நடிகை கஸ்தூரி!

அடல் கேண்டீனில் ரூ. 5 -க்கு உணவு! தில்லி முதல்வர் அறிவிப்பு

SCROLL FOR NEXT