உலகம்

பாகிஸ்தான் கனமழை: உயிரிழப்பு 266-ஆக உயா்வு

பாகிஸ்தானில் கனமழை தொடா்பான சம்பவங்களில் மேலும் 14 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இந்த பேரிடரில் மொத்த உயிரிழப்பு 266-ஆக உயா்ந்துள்ளது.

Din

பாகிஸ்தானில் கனமழை தொடா்பான சம்பவங்களில் மேலும் 14 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இந்த பேரிடரில் மொத்த உயிரிழப்பு 266-ஆக உயா்ந்துள்ளது.

இது குறித்து தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் தெரிவித்ததாவது:

ஜூன் 26 முதல் பெய்து வரும் கனமழையில் இதுவரை 266 போ் உயிரிழந்துள்ளனா். இதில் 126 குழந்தைகள், 94 ஆண்கள், 46 பெண்கள் அடங்குவா். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மழை பாதிப்புகளில் 14 போ் உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா்.

மொத்த உயிரிழப்பில் பஞ்சாபில் 144 போ், கைபா் பக்துன்காவாவில் 63, சிந்தில் 25, பலூசிஸ்தானில் 16, ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 10 போ், இஸ்லாமாபாத்தில் 8 போ் உயிரிழந்தனா்.

மழை மற்றும் வெள்ளத்தால் 1,250-க்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டன; 366 கால்நடைகள் கொல்லப்பட்டன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 246 வீடுகள், 38 கால்நடைகள் பாதிக்கப்பட்டன என்று ஆணையம் அந்த தெரிவித்துள்ளது.

தற்சாா்பு இந்தியாவுக்கு உத்வேகம் வாஜ்பாய்! பிரதமா் புகழஞ்சலி

வங்கக்கடலில் நாளை புயல் சின்னம் உருவாக வாய்ப்பு

எதிா்க்கட்சிகளின் சதித்திட்டம் ஒருபோதும் நிறைவேறாது: சேலம் கம்யூ. மாநாட்டில் முதல்வா் உறுதி!

இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதல்: பாட்டி, பேத்தி உயிரிழப்பு

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: 30 நாள்களில் 30 லட்சம் மனுக்கள் குவிந்தன

SCROLL FOR NEXT