ஓபல் சுச்சாட்டா Instagram | Miss World
உலகம்

யார் இந்த உலக அழகி? இந்தாண்டு பட்டம் வென்றவர்!

உலக அழகியாக தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஓபல் சுச்சாட்டா தேர்வு

DIN

உலக அழகிப் போட்டியில் ஓபல் சுச்சாட்டாவுக்கு கிரீடம் சூட்டப்பட்டது.

தெலங்கானா மாநிலத்தின் ஹைதராபாதில் 72-வது உலக அழகிப் போட்டி, மே 10 தேதி தொடங்கி சனிக்கிழமை (மே 31) வரையில் நடைபெற்றது. இந்தியாவில் 3-வது முறையாக நடைபெற்ற உலக அழகிப் போட்டியில், 108 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர்.

சனிக்கிழமை இரவு நடைபெற்ற இறுதிச்சுற்றில், தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த அழகி ஓபல் சுச்சாட்டா, உலக அழகிக்கான பட்டத்தை வென்றார். அவருக்கு, கடந்தாண்டு உலக அழகிப் பட்டம் வென்ற செக் குடியரசு அழகி கிறிஸ்டினா பிஸ்கோவா கிரீடம் சூட்டினார். மேலும், ஓபலுக்கு பரிசுத்தொகையாக ரூ. 8.5 கோடி வழங்கப்பட்டது.

வெள்ளைநிற உடை அணிந்து வந்த அவர், ஓபல் ஃபார் ஹெர் (Opal - ரத்தினக் கல்) என்ற பெயரில், பட்டத்தை அனைத்து அழகிகளுக்கும் சமர்ப்பித்தார். மேலும், அவர் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்தமையால், புற்றுநோய் குறித்த விழிப்புணர்வையும் அழகிகள் மேடையில் மேற்கொண்டார்.

மேலும், பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு மிஸ் வேர்ல்டு மனிதாபிமான விருதும் வழங்கப்பட்டது.

முன்னதாக, இந்தப் போட்டியில் கண்ணியக் குறைவாக நடத்துவதாகக் கூறி, போட்டியிலிருந்து இங்கிலாந்து அழகி மில்லா மேகி விலகியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT