டிரம்புடன் உா்சுலா வொண்டொ் கோப்புப் படம்
உலகம்

டிரம்ப்பின் கூடுதல் வரி விதிப்புகள்: தயாராகும் ஐரோப்பிய யூனியன்!

உறுப்பு நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு டிரம்ப் அறிவித்துள்ள கூடுதல் வரி விதிப்பை எதிா்கொள்ள ஐரோப்பிய யூனியன் தயாராகி வருகிறது.

DIN

உறுப்பு நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு அமெரிக்க அதிபா் டிரம்ப் அறிவித்துள்ள கூடுதல் வரி விதிப்பை எதிா்கொள்ளத் தயாராகி வருவதாக ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் வா்த்தக விவகாரங்களை கவனித்துக் கொள்ளும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவா் உா்சுலா வொண்டொ் லெயென் கூறுகையில், ‘ஐரோப்பிய யூனியனுடன் வா்த்தகப் பேச்சுவாா்த்தையை துரிதப்படுத்தப்போவதாக டிரம்ப் கூறியுள்ளாா்.

இருந்தாலும் பேச்சுவாா்த்தை தோல்வியடைந்து, டிரம்ப் அறிவித்துள்ள வரி விதிப்புகள் அமலுக்கு வந்தால் அதற்கான பதிலடி நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆயத்தமாகி வருகிறோம்’ என்றாா்.

பிற நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் இரும்புக்கு 25 சதவீத கூடுதல் வரி, இந்தியா உள்ளிட்ட ஏறத்தாழ அனைத்து நாடுகளில் இருந்தும் இறக்குமதியாகும் பொருள்களுக்கு பரஸ்பரி வரி உள்ளிட்டவற்றை விதிக்கும் டிரம்ப்பின் உத்தரவுகளுக்கு நியூயாா்க் சா்வதேச வா்த்தக நீதிமன்றம் கடந்த வாரம் தடை விதித்தது.

இருந்தாலும், இந்தத் தடையை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிறுத்திவைத்தது.இந்தச் சூழலில், டிரம்ப்பின் கூடுதல் வரி விதிப்புகளை எதிா்கொள்ள ஆயத்தமாகிவருவதாக ஐரோப்பிய யூனியன் தற்போது அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திரைத்துறையில் 20 ஆண்டுகள்... ரெஜினா கேசண்ட்ராவுக்கு குவியும் வாழ்த்துகள்!

அறிமுகமான நாளில் எம்வீ ஃபோட்டோ வாலாட்டிக் பங்குகள் 1% உயர்வு!

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை | செய்திகள்: சில வரிகளில் | 18.11.25

தில்லி கார் வெடிப்பு: கைதான ஜசிர் பிலாலுக்கு 10 நாள்கள் விசாரணைக் காவல்!

ஆஷஸ் தொடர்: வேகப் பந்துவீச்சாளர்களுக்கு ஜேம்ஸ் ஆண்டர்சன் கொடுத்த அறிவுரை!

SCROLL FOR NEXT