எலான் மஸ்க்  AP
உலகம்

டிரம்ப் அரசின் மசோதாவை கடுமையாக விமர்சித்த எலான் மஸ்க்!

வரி மற்றும் செலவு மசோதாவுக்கு எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்திருப்பது பற்றி...

DIN

அமெரிக்க அரசு கொண்டு வந்துள்ள வரி மற்றும் செலவு மசோதாவுக்கு தொழிலதிபர் எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்த எலான் மஸ்க், அவர் வெற்றி பெற்ற பிறகு அரசின் செயல்திறன் மேம்பாட்டுத் துறைக்கு தலைவராக பொறுப்பேற்றார்.

அரசுத் துறையின் பல்வேறு செலவீனங்களை குறைத்த எலான் மஸ்க், கடந்த வாரம் அப்பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, எலான் மஸ்க் பதவியில் இருந்து விலகினாலும் அவர் எப்போதும் எங்களுக்கு ஆதரவாக இருப்பார் என்று டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், டிரம்ப் அரசு தாக்கல் செய்துள்ள வரி மற்றும் சலுகை மசோதாவை எலான் மஸ்க் கடுமையாக விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “என்னை மன்னிக்கவும், இனிமேலும் என்னால் இதை தாங்க முடியாது. மிகப்பெரிய முட்டாள்தனமான இந்த மசோதா அருவருப்பானது.

இதற்கு ஆதரவாக வாக்களித்த உறுப்பினர்கள் வெட்கப்பட வேண்டும். நீங்கள் செய்தது தவறு என்று உங்களுக்கே தெரியும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

வரி மற்றும் செலவு மசோதா குறுகிய அவையில் நிறைவேற்றப்பட்டு செனட் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

வரி சீர்திருத்தங்கள், வரி சலுகைகள் மற்றும் குடியேற்ற நடைமுறையைக் கடுமையாக்குவது போன்ற முக்கிய அம்சங்கள் மசோதாவில் இடம்பெற்றுள்ளது.

இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதில் இருந்தே எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT