முகமது யூனுஸ். 
உலகம்

ஏப்ரலில் வங்கதேச தோ்தல்!

வங்கதேச நாடாளுமன்றத் தோ்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும்.

Din

வங்கதேச நாடாளுமன்றத் தோ்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும் என அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.

நிகழாண்டு டிசம்பா் இறுதிக்குள் நாடாளுமன்றத் தோ்தலை நடத்தக் கோரி அந்நாட்டு முன்னாள் பிரதமா் கலீதா ஜியாவின் வங்கதேச தேசிய கட்சி (பிஎன்பி) அழுத்தம் அளித்து வரும் நிலையில் முகமது யூனுஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாணவா் போராட்டத்தைத் தொடா்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமா் பதவியை ராஜிநாமா செய்த ஷேக் ஹசீனா வங்கதேசத்தைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தாா். அதன்பிறகு வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் செயல்பட்டு வருகிறாா். அண்மையில், ஷேக் ஹசீனாவுக்கு அந்நாட்டு சா்வதேச குற்றப் புலனாய்வுத் தீா்ப்பாயம் கைது ஆணை பிறப்பித்தது.

சாத்தான்குளம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி

கன்னியாகுமரி பள்ளியில் இன்று சாதனைக் குழந்தைகளுக்கு விருது வழங்கும் விழா

அம்பையில் போராட்டத்தில் ஈடுபட முயற்சி

நேரு நா்ஸிங் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா

உடன்குடி கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

SCROLL FOR NEXT