கோப்புப் படம் ஏபி
உலகம்

தென் ஆப்பிரிக்காவில் வெள்ளம்! பள்ளிக் குழந்தைகள் உள்பட 49 பேர் பலி!

தென் ஆப்பிரிக்காவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் 49 பேர் பலியாகியுள்ளனர்.

DIN

தென் ஆப்பிரிக்கா நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் பள்ளிக் குழந்தைகள் உள்பட 49 பேர் பலியாகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் நிலவும் குளிர்ந்த வானிலையால், அந்நாட்டின் பல பகுதிகளில் கனமழை மற்றும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

கிழக்கு கேப் மாகாணத்தில் பெய்த கனமழையால், அங்குள்ள பல குடியிருப்புப் பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. இந்நிலையில், இந்த வெள்ளத்தால் 6 பள்ளிக்குழந்தைகள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளதாக, அம்மாகாண ஆளுநர் ஆஸ்கார் மபூயானே தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பெய்த கனமழையால், அம்மாகாணத்தின் ஆற்றில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டு, நேற்று (ஜூன் 10) குழந்தைகளுடன் வந்த பள்ளிவாகனம் ஒன்று அடித்துச் செல்லப்பட்டது.

இதில், 10 பள்ளிக்குழந்தைகள் மாயமான நிலையில், 6 பேரின் உடல்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன. மேலும், 4 குழந்தைகளைத் தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த 2022-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதிகளைத் தாக்கிய புயல் மற்றும் அதைத் தொடர்ந்த கனமழையால், சுமார் 400-க்கும் மேற்பட்டோர் பலியானதாகக் கூறப்படுகிறது. மேலும், ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: சீனாவிலிருந்து அரிய தனிமங்கள் இறக்குமதி: அமெரிக்கா புதிய ஒப்பந்தம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மும்பை மோனோரயில் விபத்து: ரயிலில் இருந்த 400-க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக மீட்பு!

மலரே குறிஞ்சி மலரே... ஐஸ்வர்யா சர்மா!

ரஷியாவில் ஜெய்சங்கர்! இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை

வெண்மேகம்... தமன்னா!

மஞ்ச காட்டு மைனா... ஜியா ஷங்கர்!

SCROLL FOR NEXT