டிரம்ப்   AP
உலகம்

சீனாவிலிருந்து அரிய தனிமங்கள் இறக்குமதி: அமெரிக்கா புதிய ஒப்பந்தம்!

சீனாவுடன் அமெரிக்கா புதிய ஒப்பந்தம்: அரிய தனிமங்கள் இறக்குமதி - டிரம்ப்

DIN

வாஷிங்டன்: சீனாவிலிருந்து அரிய தனிமங்கள் இறக்குமதிக்கான புதியதொரு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். புதன்கிழமை(ஜூன் 11)

இந்த புதிய ஒப்பந்தத்தின் கீழ், சீனாவிலிருந்து காந்தங்கள்(மேக்நெட்) மற்றும் புவியிலிருந்து கிடைக்கும் அரிய பல தனிமங்களை அமெரிக்கா இறக்குமதி செய்து கொள்ளும். மேலும், இதற்கான இறக்குமதி வரியாக சீனாவிடமிருந்து 55 சதவீதம் வசூலிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஈடாக, அமெரிக்க தரப்பிலிருந்து சீனா விரும்புவதை நாங்கள் வழங்குவோம் என்று டிரம்ப் தெரிவித்திருக்கிறார். முக்கியமாக, சீனாவைச் சேர்ந்த மாணவர்கள் அமெரிக்காவில் உள்ள கல்லூரிகளில் பல்கலைக்கழகங்களில் படிப்பைத் தொடர அனுமதியளிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

சமீபத்தில் டிரம்ப் வெளியிட்டிருந்த உத்தரவின்கீழ், அமெரிக்க கல்வி நிறுவன வளாகங்களிலிருந்து சீன நாட்டவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒப்பந்தத்தின் இறுதி வடிவம் தயாரான பின், அமெரிக்கா - சீனா இருநாட்டு அதிபர்களும் கையெழுத்திடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போலி ஆவணங்கள் மூலம் வீட்டுமனை விற்பனை: 3 போ் கைது

எழும்பூா் ரயில் நிலையத்தில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்

இருசக்கர வாகனம் எரிப்பு: இருவா் கைது

சீன ஓபன்: இறுதிச் சுற்றில் அனிஸிமோவா-லிண்டா

தேசிய மோட்டாா் பைக் பந்தயம்: ஜெகதிஸ்ரீ முதலிடம்

SCROLL FOR NEXT