கோப்புப் படம் 
உலகம்

இஸ்ரேலுக்கு பதிலடி? 100-க்கும் அதிகமான ட்ரோன்களை அனுப்பிய ஈரான்!

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த 100-க்கும் மேற்பட்ட ராணுவ ட்ரோன்களை ஈரான் அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

DIN

இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க, 100-க்கும் மேற்பட்ட ராணுவ ட்ரோன்களை ஈரான் அனுப்பியுள்ளதாக, இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் ஈரானின் ராணுவ தளவாடங்கள், அணுசக்தி கட்டமைப்புகள், ராணுவ அலுவலகங்கள் ஆகியவற்றை குறிவைத்து நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதல்களில், ஈரானின் முப்படை தலைமைத் தளபதி உள்ளிட்ட 3 முக்கிய ராணுவ தளபதிகள் கொல்லப்பட்டனர். இதனால், எப்போது வேண்டுமானாலும் இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல்கள் நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் அந்நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் 100-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவியுள்ளதாக, இஸ்ரேல் ராணுவப் படைகளின் செய்தித்தொடர்பாளர் எஃபி டெஃப்ரின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அந்நாட்டு ஊடகங்களின் வெளியான செய்திகளில், ஈரான் அனுப்பிய ட்ரோன்கள் அனைத்தும் இஸ்ரேலின் எல்லையை அடைய சில மணி நேரமாகும், அதற்குள் இஸ்ரேல் அவற்றை தகர்க்கவில்லை என்றால் பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, ஈரானின் 100-க்கும் மேற்பட்ட பகுதிகளின் மீது இஸ்ரேல் சுமார் 200 போர் விமானங்களின் மூலம் இன்று (ஜூன் 13) அதிகாலை முதல் தாக்குதல்கள் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: தாய்லாந்தில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்! ஏன்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லியோ சாதனையை முறியடித்த ஜன நாயகன்!

2025: ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டம் முதல் கரூர் வரை... நெஞ்சை உலுக்கிய நெரிசல் பலிகள்!

ஆஷஸ் தொடர்: சாதனைப் பட்டியலில் இணைந்த அலெக்ஸ் கேரி!

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

SCROLL FOR NEXT