முகப்பு
உலகம்

இஸ்ரேல் தாக்குதல்: ஈரானின் தலைமைத் தளபதிகள் மேலும் 2 பேர் கொலை!

இஸ்ரேலின் தாக்குதல்களில் ஈரானின் ராணுவ தளபதிகள் கொல்லப்பட்டது குறித்து...

Updated On : 14 ஜூன், 2025 at 8:35 AM
இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானின் தலைமைத் தளபதிகள் மேலும் 2 பேர் கொல்லப்பட்டனர்.
பகிர்:

இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானின் தலைமைத் தளபதிகள் மேலும் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில், ராணுவ தலைமைத் தளபதிகள் மேலும் 2 பேர் கொல்லப்பட்டதாக ஈரான் அரசின் செய்தித் தொலைக்காட்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஈரானின் ஆயுதப்படைகளின் பொது ஊழியர்களுக்கான உளவுத்துறையின் துணைத் தலைவர் ஜெனரல் கோலாம்ரெசா மெஹ்ரபி மற்றும் ராணுவ செயல்பாடுகளின் துணைத் தலைவர் மெஹ்தி ரப்பானி ஆகியோர் கொல்லப்பட்டது உறுதியாகியுள்ளது.

இருப்பினும், அவர்கள் எப்போது? எங்கு? கொல்லப்பட்டார்கள் என்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

முன்னதாக, ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள், ராணுவ தளவாடங்கள் மற்றும் அலுவலகங்கள் ஆகியவற்றின் மீது நேற்று (ஜூன் 13) இஸ்ரேல் தொடர் தாக்குதல்கள் நடத்தியுள்ளது.

இதில், ஈரானின் முப்படை தலைமைத் தளபதி உள்பட முக்கிய ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பயணிகளின் பாதுகாப்பே முக்கியம்! வேறு பாதையில் இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்கள்!

முழு கட்டுரையைப் படிக்க →