ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்ந்தால், தெஹ்ரான் பற்றி எரியும் என இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆபரேஷன் ரைசிங் லயன் எனும் ராணுவ நடவடிக்கை மூலம், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் அமைந்திருந்த ராணுவ தளவாடங்கள், ராணுவ அலுவலகங்கள் மற்றும் அணுசக்தி கட்டமைப்புகள் ஆகியவற்றின் மீது இஸ்ரேல் நேற்று (ஜூன் 13) தாக்குதல் நடத்தியது.
இதில், ஈரானின் முப்படை தலைமைத் தளபதி உள்பட 70-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதனால், இந்தத் தாக்குதல்களுக்கு பதிலடியாக இஸ்ரேலின் பல்வேறு முக்கிய நகரங்களின் மீது ஈரான் நேற்று நள்ளிரவு முதல் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தி வருகின்றது.
இந்நிலையில், இந்தத் தாக்குதல்கள் குறித்து இஸ்ரேலின் முப்படை தளபதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு பின் பேசிய அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், இஸ்ரேல் மக்களை அச்சுறுத்திய ஈரான் கடுமையான தண்டனைகளை அனுபவிக்கக் கூடும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்ந்தால் அந்நாட்டின் தலைநகர் தெஹ்ரான் பற்றி எரியும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இதையும் படிக்க: டெல் அவிவ் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்! கடும் சேதம் - விடியோ
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.