AP
உலகம்

ஈரான் பாதுகாப்பு அமைச்சகம் மீது இஸ்ரேல் தாக்குதல்! மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர்ப் பதற்றம்!

ஈரானின் பாதுகாப்பு அமைச்சகம் மீது இஸ்ரேலின் தாக்குதலால், மத்திய கிழக்குப் பகுதியில் போர்ப் பதற்றம் அதிகரிப்பு

DIN

ஈரானின் பாதுகாப்பு அமைச்சகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், மத்திய கிழக்குப் பகுதியில் போர்ப் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஈரானின் ராணுவத் தளவாடங்கள் மீது இஸ்ரேல், வெள்ளிக்கிழமையில் தாக்குதல் நடத்திய நிலையில், இன்று மீண்டும் ஈரானில் உள்ள எரிசக்தி உற்பத்தி, பாதுகாப்பு அமைச்ச தலைமையகத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

இதனால் மத்திய கிழக்குப் பகுதியில் நிலவி வரும் போர்ப் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

இதனிடையே, தங்கள் நாட்டு மக்களை, பதுங்கு குழிக்குள் பாதுகாப்பாக இருக்குமாறு இஸ்ரேல் அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஆபரேஷன் ரைசிங் லயன் (Operation Rising Lion) எனும் ராணுவ நடவடிக்கை மூலம், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் ராணுவ தளவாடங்கள், ராணுவ அலுவலகங்கள் மற்றும் அணுசக்தி கட்டமைப்புகள் ஆகியவற்றின் மீது இஸ்ரேல் வெள்ளிக்கிழமையில் (ஜூன் 13) தாக்குதல் நடத்தியது.

இதனையடுத்து, இந்தத் தாக்குதல்களுக்கு பதிலடியாக இஸ்ரேலின் பல்வேறு முக்கிய நகரங்களின் மீது ஈரான் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தி வருகிறது.இந்த தாக்குதலில், ஈரானின் முப்படை தலைமைத் தளபதி உள்பட 70-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் மீது ஈரானும் தாக்குதலைத் தொடங்கியது. மேலும், ஈரான் தாக்குதலைத் தடுத்தாலோ, இஸ்ரேலுக்கு உதவினாலோ, அந்த நாடுகளின் ராணுவ மற்றும் கடற்படைத் தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிக்க: சொல்லப் போனால்... சொந்த மண்ணிலேயே அன்னியரைப் போல...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அக்னி - 5 ஏவுகணைச் சோதனை வெற்றி!

வளர்ப்பு நாய்கள் வைத்திருப்போருக்கு... சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை!

ஆந்திரம்: குளத்தில் மூழ்கி 6 குழந்தைகள் பலி!

மியான்மரில் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 4.2 ஆகப் பதிவு!

அமித் ஷா மீது தூக்கியெறியப்பட்ட மசோதா நகல்கள்!செய்திகள்: சில வரிகளில் | 20.8.25 | TVKVIJAY | BJP

SCROLL FOR NEXT