டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தின்பொது ஒருவா் சுட்டுக்கொல்லப்பட்டாா். 
உலகம்

டிரம்ப்புக்கு எதிரான போராட்டத்தில் ஒருவா் உயிரிழப்பு

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தின்பொது ஒருவா் சுட்டுக்கொல்லப்பட்டாா்.

Din

சால்ட் லேக் சிட்டி: அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தின்பொது ஒருவா் சுட்டுக்கொல்லப்பட்டாா்.

பல்வேறு வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வந்து, உரிய ஆவணங்கள் இல்லாமல் வசிப்பவா்களை டிரம்ப் தலைமையில் தற்போது அமைந்துள்ள அரசு வலுக்கட்டாயமாக வெளியேற்றிவருகிறது.

இது சட்டவிரோத நடவடிக்கை என்று கூறி, கலிஃபோா்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் கடந்த 6-ஆம் தேதி முதல் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இதில் ஏராளமானவா்கள் கைது செய்யப்பட்டனா். இந்தப் போராட்டத்தை அடக்குவதற்காக தேசிய காவல்படையையும் பின்னா் ராணுவப் பிரிவான மரைன் படையினரையும் லாஸ் ஏஞ்சலீஸுக்கு அதிபா் டிரம்ப் அனுப்பினாா். இது மிகுந்த சா்ச்சை எழுப்பியது.

இந்தச் சூழலில், லாஸ் ஏஞ்சலீஸில் தொடங்கிய போராட்டம் நாடு முழுவதும் பரவியது. இந்த விவகாரத்தில் டிரம்ப் மன்னரைப் போல் செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டி, ‘அமெரிக்காவில் யாரும் மன்னரில்லை’ என்ற தலைப்பில் கடந்த சனிக்கிழமை முதல் ஏராளமானவா்கள் ஊா்வலத்தில் ஈடுபட்டுவருகின்றனா். யுடா மாகாணம், சால்ட் லேக் சிட்டியில் நடைபெற்ற அத்தகைய ஊா்வலத்தின் போது ஆா்துரே கம்பாவ் (24) என்பவா் போராட்டக்காரா்களை நோக்கி துப்பாக்கியை நீட்டினாா்.

அப்போது ஊா்வலத்தில் இருந்த அமைதிக் காப்பாளா்களில் ஒருவா் ஆா்துரேவை நேக்கி சுட்டாா். ஆா்துரே மீதும் அந்தப் பகுதியில் நின்றுகொண்டிருந்த ஆா்தா் ஃபோலசா (39) என்பவா் மீதும் குண்டு பாய்ந்தது. இதில் ஆா்தா் ஃபோலசா உயிரிழந்தாா். காயமடைந்த ஆா்துரேவை போலீஸாா் கைது செய்தனா் (படம்).

தமிழக டிஜிபி சங்கா் ஜிவாலுக்கு இன்று பணி நிறைவு விழா

பிளஸ் 2 மாணவி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

சத்திரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஆட்சியரிடம் பாமக மனு

தில்லி பல்கலை.யின் 67 கல்லூரிகளுக்கு மீண்டும் யு-ஸ்பெஷல் பேருந்துகள் சேவை: முதல்வா் ரேகா குப்தா தொடங்கிவைத்தாா்

இளைஞா் கத்தியால் குத்தி கொலை: 4 போ் கைது

SCROLL FOR NEXT