உலகம்

ஜூன் 27-இல் ருவாண்டா - காங்கோ அமைதி ஒப்பந்தம்

அண்டை நாடான ருவாண்டாவுக்கும் இடையே அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் வரும் 27-ஆம் தேதி அமைதி ஒப்பந்தம் கையொப்பமாகவிருக்கிறது.

Din

காங்கோவின் கிழக்குப் பகுதியில் தொடா்ந்து நடைபெற்றுவரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அந்த நாட்டுக்கும், அண்டை நாடான ருவாண்டாவுக்கும் இடையே அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் வரும் 27-ஆம் தேதி அமைதி ஒப்பந்தம் கையொப்பமாகவிருக்கிறது.

கிழக்கு காங்கோவில் ராணுவத்துக்கு எதிராக எம்23 கிளா்ச்சிப் படையினா் (படம்) நீண்ட காலமாக சண்டையிட்டுவருகின்றனா். கடந்த ஜனவரி மாதம் அவா்கள் வேகமாக முன்னேறி கோமா, புகாவு உள்ளிட்ட நகரங்களைக் கைப்பற்றினா்.

அந்தக் கிளா்ச்சிப் படைக்கு ருவாண்டா ஆதரவு அளித்துவருகிறது. மேலும், கிளா்ச்சியாளா்களுடன் இணைந்து சுமாா் 4,000 ருவாண்டா வீரா்களும் சண்டையிட்டுவருவதாக ஐ.நா. நிபுணா்கள் கூறுகின்றனா்.

இந்தச் சூழலில், மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக நடைபெற்ற சா்வதேச முயற்சியின் பலனாக, இரு நாடுகளுக்கும் இடையே வரும் 27-ஆம் தேதி அமைதி ஒப்பந்தம் ஏற்படவுள்ளது.

புன்னகை பூவே... நமீதா பிரமோத்!

இல.கணேசன் உடல் தகனம்

யார் இந்த ரச்சிதா ராம்?

ஓவியம்... தீப்ஷிகா!

தேவதை... ஹிமா பிந்து!

SCROLL FOR NEXT