மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஹுவாய்ஜி மாநகர். AP
உலகம்

வீதிகளெல்லாம் வாய்க்கால்கள்! ஆற்று வெள்ளம் சூழ்ந்த சீன நகரம்!

தெற்கு சீன நகரத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பற்றி...

DIN

தெற்கு சீனாவில் உள்ள ஹுவாய்ஜி மாநகரில் பெய்த கனமழையால் வீதிகளில் வாய்க்கால் போல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

குவாங்டாங் மாகாணத்தை தாக்கிய புயல் காரணமாக கடந்த புதன்கிழமை அதிகனமழை பெய்துள்ளது. குறிப்பாக ஹுவாய்ஜி மாநகரப் பகுதிகளில் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, சுய்ஜியாங் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஹுவாய்ஜி நகரப் பகுதிக்குள் புகுந்த தண்ணீர் சாலைகளை வாய்க்கால்களைப் போன்று மாற்றியுள்ளது.

குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த வெள்ள நீர், முதல் மாடி வரை மூழ்கடித்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் இருந்து இதுவரை 30,000-க்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு தேவையான உணவு, உடை உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை அரசு வழங்கி வருகின்றது.

சாலைகளில் தேங்கிய வெள்ள நீர்.

மேலும், இந்த புயல் காரணமாக பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி, தெற்கு சீனாவின் குவாங்சி பகுதியில் 5 பேர் சமீபத்தில் பலியாகினர்.

தெற்கு சீனாவில் பாதிக்கப்பட்ட பல்வேறு நகரங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மீட்புக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்டிபிசி நிறுவனத்தில் டிரெய்னி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

செங்கோட்டையன் பதவிப் பறிப்புக்கு எதிர்ப்பும் கொண்டாட்டமும்!

அமெரிக்காவுடனான உறவு சீர்குலையக் கூடாது: அகிலேஷ் யாதவ்

2-வது டி20: ஜிம்பாப்வே அபார பந்துவீச்சு; 80 ரன்களுக்கு ஆட்டமிழந்த இலங்கை!

தேனிலவுக் கொலை வழக்கு: 790 பக்க குற்றப்பத்திரிகை! | Honeymoon murder

SCROLL FOR NEXT