கோப்புப் படம் 
உலகம்

நைஜர்: துப்பாக்கிச் சூட்டில் 34 வீரர்கள் பலி! ராணுவம் தேடுதல் வேட்டை!

நைஜரில் ஆயுதம் ஏந்திய குழுவொன்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 34 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

DIN

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில், ஆயுதம் ஏந்திய நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 34 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

நைஜரின் மேற்குப் பகுதியில், மாலி மற்றும் புர்கினா ஃபஸோ ஆகிய நாடுகளுடனான எல்லையில் பனிபங்கோ என்ற நகரம் அமைந்துள்ளது.

இந்த நகரத்தில், நேற்று (ஜூன் 19) காலை 9 மணியளவில், சுமார் 200-க்கும் மேற்பட்ட 2 சக்கர வாகனங்களில் வந்த ஆயுதம் ஏந்திய நபர்கள் அங்கிருந்த ராணுவ வீரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 34 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும், 14 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக நைஜரின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அரசுப்படைகள் கூறுகையில், தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் சுமார் 12-க்கும் மேற்பட்டோரை கொன்றுள்ளதாகவும், மீதமுள்ளவர்களை நிலம் மற்றும் வான்வழி நடவடிக்கைகளின் மூலம் தேடி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

நைஜர், மாலி மற்றும் புர்கினா ஃபாஸோ ஆகிய மூன்று நாடுகளும், ஜிஹாதி குழுக்கள் நடத்தி வரும் உள்நாட்டு கிளர்ச்சிகளுக்கு எதிராகக் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருகின்றன.

இந்த மூன்று நாடுகளிலும், சமீபத்தில் ராணுவப் புரட்சியின் மூலம் ஆட்சி அமைந்த நிலையில், தங்களது நாட்டிலிருந்த ஃபிரான்ஸ் படைகளை வெளியேற்றி; பாதுகாப்புக்காக 3 நாடுகளின் அரசுகளும் ரஷியாவின் உதவியைக் கோரியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஒரே இரவில் உக்ரைனின் 61 ட்ரோன்களை வீழ்த்திய ரஷியா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிடில் கிளாஸ் திரைப்படத்துக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும்: முனீஸ்காந்த்

தொடர் வெற்றியைப் பெற்ற பிரணவ் மோகன்லால்!

வான்மதி... சான்வி மேக்னா!

அழகிய தீயே... ஸ்ரேயா சரண்!

எஸ்ஐஆா் பணியில் திமுக அரசு முறைகேடு: அதிமுக ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT