இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு  AP
உலகம்

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்: வான்வெளியை மூடிய இஸ்ரேல்!

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இஸ்ரேல் தனது வான்வெளியை மூடியுள்ளது குறித்து...

DIN

ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இஸ்ரேல் தனது வான்வெளியை மூடியுள்ளது.

இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கிடையே ஒரு வாரத்துக்கும் மேலாக போர் நிலவி வரும் நிலையில், நேற்று(ஜூன் 21) ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.

ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையங்களான ஃபோர்டோ, நடான்ஸ், இஸ்பஹானில் அமெரிக்கா தாக்குதல் நடத்தப்பட்டு, போர் விமானங்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறியுள்ளன. 

இந்த நிலையில், ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்காவின் தாக்குதல்களைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இஸ்ரேல் தனது வான்வெளியை மூடியுள்ளது.

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய சிறிது நேரத்திலேயே அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசியதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

"தாக்குதல் நடவடிக்கையின் தொடக்கத்தில், ஈரானின் அணுசக்தி நிலையங்கள் அழிக்கப்படும் என்று நான் உங்களுக்கு உறுதியளித்தேன். இந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது," என்று நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அமைதி ஏற்படும் அல்லது அழிவு ஏற்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இஸ்ரேல் - ஈரான் - அமெரிக்கா! ஐ.நா. கவலை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐ. பெரியசாமி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: இடைக்காலத் தடை விதித்த உச்சநீதிமன்றம்!

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

மண் அள்ளியதாகப் புகார்: இளைஞர் மண்வெட்டியால் அடித்துக் கொலை!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஸ்டாலினிடம் ஆதரவு கோரினார் ராஜ்நாத் சிங்!

பங்குச் சந்தைகள் உயர்வுடன் வணிகம்!

SCROLL FOR NEXT