ஈரான் தாக்குதலில் உருக்குலைந்த கட்டடம் AP
உலகம்

போர் நிறுத்தத்திற்குப் பிறகு இஸ்ரேல் மீது தாக்குதலா? - ஈரான் மறுப்பு

இஸ்ரேல் - ஈரான் போர் பற்றி...

DIN

போர் நிறுத்தத்திற்குப் பிறகு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறும் குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் 12 நாள்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது என்று கூறலாம். இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று(ஜூன் 24) அறிவித்துள்ளார். போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்ட நிலையில் ஈரான் தரப்பில் இருந்து இன்னும் அதிகாரபூர்வ தகவல் வரவில்லை.

இஸ்ரேல் மீது கடைசியாக ஒரு தாக்குதலை மேற்கொண்ட பிறகு போர்நிறுத்தம் அறிவிப்பதாக ஈரான் தரப்பு கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட இரண்டரை மணி நேரத்திற்குப் பிறகு இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

ஈரானில் இருந்து பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசப்பட்டதாகவும் சைரன் சத்தங்கள் கேட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. போர் நிறுத்தத்தை மீறி ஈரான் தாக்குதல் நடத்தினால் தெஹ்ரான் அதிரும் என்று இஸ்ரேல் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் தாக்கினால் பதில் தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கான தகவல் எதுவும் இல்லை.

இந்நிலையில் இஸ்ரேல் ராணுவத்தின் குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீடு புகுந்து திருட்டு: மேலும் ஒருவா் கைது

மாநில அளவிலான சதுரங்கப் போட்டி: அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் தோ்வு

டிராக்டா் கவிழ்ந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

காரிலிருந்த ரூ. ஒரு லட்சம் நூதன முறையில் திருட்டு

மயங்கி விழுந்தவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT