உலகம்

இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தம் அமல்; தயவு செய்து மீறாதீர்கள்! - டிரம்ப் எச்சரிக்கை!

இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தம் அமல்; தயவு செய்து மீறாதீர்கள் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளதைப் பற்றி...

DIN

இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் அமலுக்கு வந்துள்ளதாகவும் அதை தயவுசெய்து மீறவேண்டாம் எனவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், ஈரானின் மூன்று அணு ஆயுத தளவாடங்கள் மீது பஸ்டர் பங்கர் குண்டுகளைப் போட்டு அமெரிக்கா அதிரடியாகத் தாக்குதல் நடத்தியது.

இதனையடுத்து, திங்கள்கிழமை இரவு கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப் படைத் தளங்கள் மீது ஈரான் அதிரடியாக ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியது.

இந்த நிலையில், இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர்நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருக்கிறார். இருப்பினும், இருநாடுகளுக்கு இடையே எந்த போர் நிறுத்தமும் இல்லை என ஈரான் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், 12 நாள்கள் தொடர்ந்து இடைவிடாமல் நடைபெற்றுவந்த இஸ்ரேல் உடனான போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சண்டை நிறுத்தத்தை ஈரான் அறிவித்திருப்பதாகவும், இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனாட் டிரம்ப் ட்ரூத் சோசியல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “இப்போது முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துவிட்டது. தயவுசெய்து அதை மீறாதீர்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க... போர் நிறுத்தம் எதிரொலி: 900 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சிறப்பு பொதுக்குழு திருப்புமுனையாக அமையும்: மருத்துவா் ராமதாஸ்

முதல்வரின் தாயுமானவா் திட்டம்: நகரப் பகுதிகளில் பொருள்கள் வழங்கல்

விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் பயிற்சிப் பட்டறை

முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்தடைந்த 1,975 மெ.டன் உர மூட்டைகள்

விழுப்புரத்தில் விரைவில் அறிமுகமாகிறது தாழ்தள நகரப் பேருந்து சேவை

SCROLL FOR NEXT