உலகம்

இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்த எதிரொலி! கச்சா எண்ணெய் அதிரடி சரிவு!

கச்சா எண்ணெயின் விலை, போர்த் தொடக்கக் காலத்தில் இருந்ததைவிட சரிவு

DIN

இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்த முடிவு வெளியானதையடுத்து, கச்சா எண்ணெய் விலை சரிந்தது.

இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் முடிவு பெறுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

இந்த நிலையில், இரு நாடுகளுக்கிடையேயான போரின் காரணமாக அதிகரித்த கச்சா எண்ணெயின் விலை, மீண்டும் சரியத் தொடங்கியது.

உலகளாவிய எண்ணெய் அளவுகோலான ப்ரெண்ட் (Brent) கச்சா எண்ணெய், ஆசிய வர்த்தகத்தின் தொடக்கத்தில் 5 சதவிகிதம் சரிந்து, 68 டாலராகக் குறைந்தது. போர் தொடக்கமான ஜூன் 12 ஆம் தேதியில் இருந்த விலையைவிட, இது குறைவாகும்.

அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக, திங்கள்கிழமை இரவில் கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப் படைத் தளத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. ஆனால், தாக்குதல் நடத்தப்பட்ட சில மணிநேரங்களிலேயே இஸ்ரேல் - ஈரான் ஆகிய இரு நாடுகளும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், போர் நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து, அமெரிக்க பங்குச் சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்தது.

இதையும் படிக்க: இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நிறுத்தம்! டிரம்ப் அதிகாரபூர்வ அறிவிப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவர்ஹவுஸ்! ரஜினிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

இல.கணேசன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

அழகு மலர்கள்... ஜான்வி கபூர்!

அல்கெம் லேப்ஸ் லாபம் 22% உயர்வு!

தமிழக பாஜகவின் வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்தவர் இல.கணேசன்: மோடி இரங்கல்

SCROLL FOR NEXT