கோப்புப் படம் 
உலகம்

ஆபரேஷன் சிந்து: ஈரானில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 2,200-ஐ கடந்தது!

ஈரானில் இருந்து 292 இந்தியர்கள் இன்று காலை தாயகம் திரும்பியுள்ளனர்.

DIN

ஆபரேஷன் சிந்து மீட்புத் திட்டத்தின் மூலம் ஈரான் நாட்டில் சிக்கியிருந்த 292 இந்தியர்கள் இன்று (ஜூன் 24) காலை தாயகம் திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போரால், இருநாடுகளிலும் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு “ஆபரேஷன் சிந்து” எனும் மீட்புத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஈரானின் மஷாத் நகரத்திலிருந்து இன்று (ஜூன் 24) அதிகாலை 3.30 மணியளவில் இயக்கப்பட்ட, அவசரகால சிறப்பு விமானம் மூலம் 292 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளதாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், ஈரானிலிருந்து ஆபரேஷன் சிந்து நடவடிக்கையினால் இதுவரை 2,295 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்திய விமானப் படைக்குச் சொந்தமான சி -17 ராணுவ விமனம் மூலம் இஸ்ரேலில் வசித்த 165 இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டனர்.

இஸ்ரேலில் இருந்து ஜோர்டான் தலைநகர் அம்மானுக்கு நிலம் எல்லை வழியாக அழைத்து வரப்பட்ட அவர்கள் அனைவரும், அங்கிருந்து விமானம் மூலம் இந்தியா வந்தடைந்தனர்.

இத்துடன், இந்தியர்களை மீட்பதற்காக மட்டுமே கடந்த ஜூன் 20 ஆம் தேதி, ஈரான் அதன் வான்வழியைத் திறந்து மூன்று 3 சிறப்பு விமானங்களுக்கு அனுமதியளித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இந்தியா வான்வெளியை பாகிஸ்தான் பயன்படுத்துவதற்கான தடை நீட்டிப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை கிண்டி, அடையாறு பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

கமல் ஹாசன் சொன்ன கழுதைகளின் கதை!

கொடைக்கானலில் கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை

போலந்து நாட்டுக்குள் ரஷிய ட்ரோன்கள்! பதிலடி கொடுக்க நேட்டோ அமைப்பை உக்ரைன் வலியுறுத்தல்!

SCROLL FOR NEXT