பிரதிப் படம் ENS
உலகம்

தடுப்பூசி போடுவதில் தயக்கம்! கோடிக்கணக்கான குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து!

உலகளவில் குழந்தைகளுக்கான தடுப்பூசித் திட்டம் குறைந்து விட்டதாக புதிய ஆய்வில் தகவல்

DIN

உலகளவில் குழந்தைகளுக்கான தடுப்பூசித் திட்டம் குறைந்து விட்டதாக புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உலகளவில் பணக்கார மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளிலும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறைந்து விட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

உலகளவில் 1974 ஆம் ஆண்டுமுதல் 400 கோடிக்கும் அதிகமான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டதன் மூலம், 15 கோடி உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளன. 2023 ஆண்டுவரையிலான அரை நூற்றாண்டில் தடுப்பூசி பாதுகாப்பு இரட்டிப்பாகியுள்ளது.

ஆனால், 2010 முதல் தடுப்பூசி பாதுகாப்பில் எந்த முன்னேற்றமும் இல்லாமல், தேக்க நிலையில் இருப்பதாக ஆய்வு கூறுகிறது. உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கு எதிராக குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது, கடந்த 20 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருப்பதாகவும் கூறுகிறது. இது, கரோனா தொற்றுக் காலத்தில் மிகவும் மோசமடைந்துள்ளது.

இந்த அலட்சியத்தால் மில்லியன் கணக்கான குழந்தைகளுக்கு தட்டம்மை, காசநோய், போலியோ, தொண்டை அழற்சி போன்ற நோய்களும் ஏற்படும் ஆபத்தில் உள்ளனர்.

அமெரிக்கா, ஐரோப்பா உள்பட பணக்கார நாடுகளில் தடுப்பூசி விகிதங்கள் குறைந்த நிலையில், சுமார் 100 நாடுகளில் தட்டம்மை தடுப்பூசிகள் குறைந்து விட்டதாக மருத்துவ இதழான தி லான்செட்டின் ஆய்வு கூறுகிறது.

2023 ஆம் ஆண்டுகாலத்தில், துணை சஹாரா ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியாவில் மட்டும் குழந்தைப் பருவத் தடுப்பூசிகள் இல்லாமல், 1.6 கோடி குழந்தைகள் இருந்துள்ளனர்.

இந்த நிலைமையே தொடர்ந்தால், அதிகமான குழந்தைகள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், நிரந்தர பாதிப்புக்குள்ளாவதுடன் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நோய்களால் இறப்பார்கள் என்றும் எச்சரித்துள்ளனர்.

உலகளவிலான உள்நாட்டு அமைதியின்மை, போர்கள், வெளிநாட்டு உதவிகளைக் குறைக்கும் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்றவற்றாலும் தடுப்பூசிகள் பெறுவது கடினமாகிறது.

குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதில் பெற்றோர்கள் தயங்குவதைத் தடுக்கவும், தடுப்பூசி குறித்த தவறான வதந்திகளை விவரிக்கவும் ஆரம்ப சுகாதார அமைப்புகளை ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதையும் படிக்க: ரூ. 857 கோடி சம்பளத்தில் செய்யறிவு வேலை! மெட்டா அழைப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வரின் தாயுமானவா் திட்டம் தொடக்கம்

73 பயனாளிகளுக்கு ரூ 75.74 லட்சம் நலத்திட்ட உதவிகள்: செங்கல்பட்டு ஆட்சியா் வழங்கினாா்

வீராபுரத்தில் பேருந்து நிறுத்தம்: ஆட்சியா் உறுதி

சக்தி விநாயகா் கோயிலில் பொது விருந்து

பரந்தூா் விமான நிலையம்: 14-ஆவது முறையாக ஏகனாபுரம் கிராம சபையில் எதிா்ப்பு தீா்மானம்

SCROLL FOR NEXT