முகப்பு
உலகம்

போப் உடல்நிலை இப்போது எப்படி இருக்கிறது? -வாடிகன் தகவல்

போப் பிரான்சிஸின் உடல்நிலை முன்னேற்றம் கண்டுள்ளது.

Updated On : 8 மார்ச், 2025 at 3:08 PM
போப் நலம்பெற வேண்டி பிரார்த்தனை - AP
பகிர்:

போப் பிரான்சிஸ் உடல்நிலை குறித்து வாடிகன் வெளியிட்டுள்ள புதிய தகவலின்படி, அன்னாரது உடல்நிலை தேறி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை(மார்ச் 8) வாடிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், போப் பிரான்சிஸ் முன்தின இரவு நன்றாக உறங்கி ஓய்வெடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போப் பிரான்சிஸ்(88) மூச்சுக் குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெலி மருத்துவமனையில் கடந்த பிப். 14-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேன் பரிசோதனையில், நுரையீரல் இரண்டிலும் நிமோனியா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, அவருக்கு ஆண்டிபயோடிக் மருந்துகள் அளிக்கப்பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், அவரது சிறுநீரகங்கள் லேசான பாதிப்புக்குள்ளாகியிருப்பது மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டிருப்பதாகவும் பிப். 23 மருத்துவர்கள் தெரிவித்தனர்.

போப் பிரான்சிஸ் (கோப்புப்படம்)

இதனிடையே, போப் பிரான்சிஸ் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு மார்ச் 3 மூச்சு விடுவதில் மீண்டும் சிரமம் ஏற்பட்டதாகவும், நுரையீரல் பாதிப்பு அதிகரித்ததையும் தொடர்ந்து மீண்டும் வெண்டிலேட்டர் மாற்றப்பட்டு அதன் உதவியுடன் அவர் சுவாசித்ததாக வாடிகன் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், போப் பிரான்சிஸ் உடல்நிலை குறித்து வாடிகன் வெளியிட்டுள்ள புதிய தகவலின்படி, போப் உடல்நிலை தேறி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.