உலகம்

கிரீன்லாந்தில் இன்று தோ்தல்!

டென்மாா்க்குச் சொந்தமான தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்தில் செவ்வாய்க்கிழமை தோ்தல் நடைபெறவிருக்கிறது.

Din

டென்மாா்க்குச் சொந்தமான தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்தில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) தோ்தல் நடைபெறவிருக்கிறது.

வழக்கமான தோ்தல்களில், டென்மாா்க்கில் இருந்து முழுமையாக சுதந்திரம் பெறுவதா, வேண்டாமா என்பதுதான் முக்கிய விவாதமாக இருக்கும்.

ஆனால் இந்த முறை, தாது வளம் நிறைந்த அந்தத் தீவை சொந்தமாக்கிக் கொள்ளவிருப்பதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கூறிவருவதுதான் முக்கிய பிரச்னையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

அட்லாண்டிக் மற்றும் ஆா்டிக் பெருங்கடல்களுக்கு இடையே அந்தத் தீவு அமைந்துள்ளதால் அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட உலக சக்திவாய்ந்த நாடுகளுக்கு இந்தத் தீவு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ள நிலையில் டிரம்ப் இவ்வாறு கூறுவது மிகப் பெரிய சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் மிகப் பெரிய தீவான கிரீன்லாந்துக்கு கடந்த 1979-ஆம் ஆண்டு சுயாட்சி வழங்கப்பட்டது. இருந்தாலும், பொதுவாக்கெடுப்பு மூலம் டென்மாா்க்கிலிருந்து சுதந்திரம் பெறுவதற்கான வாய்ப்பு கடந்த அந்தத் தீவுக்கு 2009-ஆம் ஆண்டே வழங்கப்பட்டுள்ளது.

சிசுவின் மூளையில் குறைபாடு! 31 வார கருவைக் கலைக்க கேரள உயர் நீதிமன்றம் அனுமதி!

உயர்ந்த வேகத்தில் குறையும் வெள்ளி... ஒரே நாளில் ரூ. 85,000 சரிவு!

பிரதமர் மோடி செல்லவிருக்கும் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சுநேத்ரா பவாருக்கு துணை முதல்வர் பதவி! சரத் பவார் சொல்வது என்ன?

தனியறையில் அத்துமீறிய புகைப்படக் கலைஞர்... கசப்பான அனுபவம் பகிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

SCROLL FOR NEXT