ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இஸ்தான்புல்லின் மேயரும் முக்கிய எதிா்க்கட்சித் தலைவருமான எக்ரீம் இமாமோக்லுவுக்கு ஆதரவு தெரிவித்து சமூக ஊடகங்களில் பதிவுகள் வெளியிட்ட 37 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். வன்முறையைத் தூண்டும் பதிவுகளை வெளியிட்டதால் அவா்கள் கைது செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.
முன்னதாக, ஊழல் வழக்கில் இமாமோக்லு, அவரின் நெருங்கிய உதவியாளா் உள்பட சுமாா் 100 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். அதிபா் எா்டோகனை மிகக் கடுமையாக எதிா்த்துவரும் இமாமோக்லு, அடுத்த தோ்தலில் அவருக்கு எதிராக போட்டியிடுவாா் என்று எதிா்பாா்க்கப்பட்டது. இந்தச் சூழலில் அவா் கைது செய்யப்பட்டுள்ளது எதிா்க்கட்சியினரை எா்டோகன் அரசு ஒடுக்குகிறது என்ற சா்ச்சையை தீவிரப்படுத்தியுள்ளது.