கோப்புப்படம்  AP
உலகம்

லண்டன் விமான நிலையம் இன்று இயங்காது! ஏன்?

லண்டன் விமான நிலையம் வெள்ளிக்கிழமை முழுவதும் மூடப்பட்டது பற்றி...

DIN

உலகின் மிகவும் பரபரப்பான லண்டனின் ஹீத்ரோ சர்வதேச விமான நிலையம் இன்று(மார்ச் 21) நள்ளிரவு 11.59 மணிவரை இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்துக்கு மின்சாரம் விநியோகிக்கும் மின் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை நள்ளிரவு 11.23 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் முதல்கட்டமாக 10 வாகனங்களில் வருகைதந்த 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அப்பகுதியில் இருந்த 150-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, 200 மீட்டர் சுற்றளவுக்கு தடை உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

விபத்தின் காரணமாக புகைமூட்டம் அதிகளவில் காணப்படுவதாலும் மின் விநியோகம் தடை பட்டதாலும் லண்டன் விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை முழுவதும் சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும், லண்டன் விமான நிலையத்துக்கு வருகை தரவிருக்கும் அனைத்து விமானங்களும் வேறு விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது.

பயணிகள் யாரும் விமான நிலையப் பகுதிக்கு வரவேண்டாம் என்றும் சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு விமானத்தின் நேரத்தை உறுதி செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு விமான நிலையங்களுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான விமானங்கள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மலரும் தீயும் வடகிழக்கு இந்தியப் பயணம்

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

SCROLL FOR NEXT