உலகம்

டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை இல்லை: கனடா பிரதமர் திட்டவட்டம்!

இறையாண்மை கொண்ட நாடாக கனடாவை மதிக்கும்வரையில் பேச்சுவார்த்தை இல்லை என்றார் கனடா பிரதமர் மார்க் கார்னி.

DIN

கனடாவை இறையாண்மை கொண்ட நாடாக மதிக்கும்வரையில் பேச்சுவார்த்தை இல்லை என்றார் கனடா பிரதமர் மார்க் கார்னி.

அமெரிக்காவின் வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட கனடா வணிகர்களை அந்நாட்டு பிரதமர் மார்க் கார்னி சந்தித்து பேசினார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகுப்புகளையும், வளத் திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளையும் கார்னி அறிவித்தார்.

கனேடிய போர் அருங்காட்சியகத்தில் அவர் பேசியதாவது, வர்த்தகப் போரினால் அமெரிக்கர்கள் பாதிக்கப்படுவதால், அதனைத் தடுக்கும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் விரும்புவார். அவர்கள் எப்போது வந்தாலும் அதற்கு நான் தயாராக இருக்கிறேன். இருப்பினும், இறையாண்மை கொண்ட நாடாக கனடாவுக்கான மரியாதை கிடைக்கும்வரையில் டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடக்காது என்று தெரிவித்தார்.

அமெரிக்காவின் 51 ஆவது மாகாணமாக கனடா இருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், கனடா அரசு அதனை மறுத்து வருகிறது. இதனிடையே, கனடா மீது அமெரிக்கா அதிகளவிலான வரி விதித்ததையொட்டி, அமெரிக்கா வர்த்தகப் போரை விரும்புவதாக பலரும் கூறினர்.

கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி கடந்த மார்ச் 14 ஆம் தேதியில் பதவியேற்ற நிலையில், இதுவரையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் தொலைபேசியில்கூட தொடர்பு கொள்ளவில்லை. அதுமட்டுமின்றி, முன்னாள் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை ஆளுநர் என்று டிரம்ப் கூறியிருந்தாலும், தற்போதைய பிரதமர் மார்க் கார்னி குறித்து டிரம்ப் எதுவும் கூறவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்பூரில் பலத்த மழை

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

திருவண்ணாமலையில் நாளை தேசிய கைத்தறி தினவிழா

SCROLL FOR NEXT