பாகிஸ்தான் மக்கள் 
உலகம்

ஆசியாவில் வாழ்வதற்கு அதிகம் செலவாகும் நாடு பாகிஸ்தானா?

ஆசியாவில் வாழ்வதற்கு அதிகம் செலவாகும் நாடு பாகிஸ்தான் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

DIN

தெற்காசிய நாடுகளில், வாழ்வதற்கு அதிகம் செலவாகும் நாடு என்ற பட்டியலில் பாகிஸ்தான் ஏற்கனவே முதலிடத்தைப் பிடித்திருந்த நிலையில், கடுமையான பணவீக்கம் காரணமாக தற்போது ஆசிய நாடுகளிலேயே வாழ்வதற்கு அதிகம் செலவாகும் நாடு என்ற பட்டியலிலும் முதலிடத்தைப் பிடித்துவிட்டது.

பல்வேறு மோசமான காரணங்களால் பாகிஸ்தான் பெயர் எப்போதும் அடிபடுவது வழக்கம்தான். அந்த வகையில்தான் தற்போது முதலிடம் பிடித்திருந்தாலும் அதனைக் கொண்டாட முடியாத நிலையில் உள்ளது. அந்த நாடு. காரணம், இந்தப் பெயருக்கும் புகழுக்கும் காரணமே விலைவாசி உயர்வுதானே.

ஆசிய மேம்பாட்டு வங்கி (ஏடிபி) நடத்திய ஆய்வில், பாகிஸ்தான் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. 25 சதவீதம் என்ற அளவில் அந்நாட்டில் பணவீக்கம் உள்ளது. இதனால், ஆசியாவிலேயே, வாழ்வதற்கு அதிகம் செலவாகும் நாடுகளின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

பிலிப்பைன்ஸ தலைநகர் மணிலாவில் கடந்த வாரம் வியாழக்கிழமை ஏடிபி வங்கியின் ஆய்வு முடிவுகள் வெளியாகியிருந்த நிலையில், ஆசிய கண்டத்தில் உள்ள 46 நாடுகளில் பாகிஸ்தான் நாட்டின் பணவீக்கம் கடுமையாக இருப்பதாகவும், அடுத்த நிதியாண்டிலாவது 15 சதவீதமாகக் குறைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுளள்து.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் பின்னடைவை சந்தித்திருக்கும் நிலையில் 250 மில்லியன் மக்கள் தொகையில் 98 மில்லியன் பாகிஸ்தான் மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ்தான் வாழ்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

அர​வணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்​ணன்

வார பலன்கள் - மீனம்

SCROLL FOR NEXT