ENS
உலகம்

இனி ஸ்டேட்டஸ்களில் பாடல் சேர்க்கலாம்! உற்சாகத்தில் வாட்ஸ்ஆப் பயனர்கள்!

இன்ஸ்டாகிராமைப்போல வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்களிலும் பாடல் சேர்க்கும் அம்சம் அறிமுகம்!

DIN

வாட்ஸ்ஆப்பில் ஸ்டேட்டஸ் பதிவேற்றும்போது, பாடலோ இசையோ சேர்த்து பதிவேற்றும் அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

வாட்ஸ்ஆப்பின் அனைத்து பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புதிய வசதியை, பயனர்கள் பலரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதுவரையில், மெட்டாவின் மற்றொரு செயலியான இன்ஸ்டாகிராமில் மட்டுமே பாடல் சேர்க்கும் அம்சம் இருந்தது. ஆனால், இன்ஸ்டாவில் நாம் பாடல் சேர்த்து எடிட் செய்யும் விடியோவை பதிவிறக்கம் செய்தால், இசையின்றியே பதிவிறக்கமாவதுபோல் இருந்தது. இசையுடன் பதிவிறக்கம் செய்ய வேண்டுமென்றால், மூன்றாம் நிலை செயலியைப் பயன்படுத்த வேண்டியிருந்தது.

இதனால், இன்ஸ்டாவில் எடிட் செய்து பதிவிறக்கம் செய்யும் விடியோவை வாட்ஸ்ஆப்பில் பகிர்வதில் சிறு சிரமம் இருந்ததாக வாட்ஸ் ஆப் பயனர்கள் கூறி வந்தனர்.

இந்த நிலையில், வாட்ஸ்ஆப்பிலும் இசை சேர்க்கும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது வாட்ஸ்ஆப் பயனர்களிடையே அளவிலா ஆனந்தத்தை ஏற்படுத்தியிருப்பதாக சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். புகைப்படங்களில் 15 விநாடிகளும், விடியோக்களில் 60 விநாடிகளும் இசை அல்லது பாடலைச் சேர்க்கும்வகையில் இந்த புதிய அம்சம் வாட்ஸ்ஆப்பில் வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது!

கோவில்பட்டி பள்ளியில் இருபெரும் விழா

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை சிறை கைதியிடம் டிஐஜி விசாரணை

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில்: அஸ்ஸாம் முதல்வா் திருமலையில் ஆலோசனை

SCROLL FOR NEXT