நிலநடுக்கம் கோப்புப்படம்
உலகம்

டோங்கா தீவில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை!

டோங்கா தீவைச் சுற்றிலும் 300 கி.மீ. தொலைவுக்கு ராட்சத அலைகள் உருவாக வாய்ப்பு.

DIN

பசிபிக் பெருங்கடலில் உள்ள டோங்கா தீவில் 7.1 ரிக்டர் அளவுகோளில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டோங்கா தீவைச் சுற்றிலும் 100 கி.மீ. சுற்றளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், தற்போது சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் 300 கி.மீ. தொலைவுக்கு ராட்சத அலைகள் உருவாக வாய்ப்புள்ளதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்குட்பட்ட பாலினேசியா துணைக் கண்டத்தில் கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் அதிகமான தீவுகள் அமைந்துள்ளன. இதில் 177 சிறு தீவுகளை உள்ளடக்கியதாக டோங்கா உள்ளது.

பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள இந்தத் தீவின் வடகிழக்கே 100 கி.மீ. தொலைவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோளில் 7.1 ஆகப் பதிவாகியுள்ளது. இத்தீவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். குறிப்பாக டோங்காதபு தீவில் பெரும்பாலானோர் உள்ளனர்.

இந்நிலையில், டோங்கோ தீவைச் சுற்றிலும் 300 கி.மீ. தொலைவுக்கு சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதையும் படிக்க | மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..!

இதையும் படிக்க | உலகளவில் சாட்ஜிபிடி சேவை பாதிப்பு! ஜிப்லி காரணமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிராண்ட் ஸ்விஸ் செஸ் தொடரை வென்ற வைஷாலி! மகிழ்ச்சியில் குடும்பத்தினர்!

கேரள தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இராமசாமி படையாட்சி பிறந்தநாள்! முதல்வர் ஸ்டாலின் மரியாதை!

மயிலாடுதுறையில் இளைஞர் ஆணவக் கொலை! நடந்தது என்ன?

மகாநதி தொடரில் முக்கிய நடிகர் மாற்றம்!

SCROLL FOR NEXT