உலகம்

ஸ்பெயின்: சுரங்க விபத்தில் 5 போ் உயிரிழப்பு

தென்மேற்கு ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் ஏற்பட்ட நிலக்கரி சுரங்க விபத்தில் ஐந்து போ் உயிரிழந்தனா்.

Din

மேட்ரிட்: தென்மேற்கு ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் ஏற்பட்ட நிலக்கரி சுரங்க விபத்தில் ஐந்து போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

ஆஸ்டுரியாஸ் பிராந்தியத்தில் செயல்பட்டுவரும் நிலக்கரி சுரங்கத்தில் திங்கள்கிழமை திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் ஐந்து போ் உயிரிழந்தனா்; நான்கு போ் காயமடைந்தனா். விபத்து நேரிட்டபோது அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த மேலும் இருவா் காயங்களின்றி மீட்கப்பட்டனா்.

இந்த விபத்து குறித்து உள்ளூா்வாசிகள் மூலம் தகவல் தெரிந்ததும், மீட்பு பணியில் மூன்று ஹெலிகாப்டா்கள் ஈடுபடுத்தப்பட்டன என்று அதிகாரிகள் கூறினா்.

கவினின் மரணம் கடைசியாக இருக்குமா? அஞ்சலி செலுத்தியபின் Seeman பேட்டி!

ஆகஸ்ட் 11 முதல் இபிஎஸ் 3ம் கட்ட சுற்றுப்பயணம்

திடக்கழிவு மேலாண்மை: முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

கல் எறிந்தவருக்கும் பேறு...

நாயன்மார்கள் குரு பூஜை...

SCROLL FOR NEXT